ஆகப் பழைய நினைவொன்றில்
தேய்த்து விட்டு
என் தொடையில் வைத்து
சுடுதா சுடுதாவென
கேட்டுக் கொண்டிருக்க
அலறி மரங்கள் மஞ்சளாய்
பூத்துக் கொட்டியிருக்கின்றன
தேய்த்து விட்டு
என் தொடையில் வைத்து
சுடுதா சுடுதாவென
கேட்டுக் கொண்டிருக்க
அலறி மரங்கள் மஞ்சளாய்
பூத்துக் கொட்டியிருக்கின்றன
வெளிறிக்கொண்டிருக்கும்
தேவதையின் முகத்தை
பசிய அலறி இலைகளால்
வருடிவிடுகின்றேன்
காய்ந்து கொண்டிருக்கும்
அவள் புன்னகையில்
ஒரு வேலிப்பூவொன்றை பறித்து
தேனையதில் ஊற்றுகிறேன்
தேவதையின் முகத்தை
பசிய அலறி இலைகளால்
வருடிவிடுகின்றேன்
காய்ந்து கொண்டிருக்கும்
அவள் புன்னகையில்
ஒரு வேலிப்பூவொன்றை பறித்து
தேனையதில் ஊற்றுகிறேன்
இடைவெளியில்
வாகன நெரிசலிலும்
கர்த்தால்களிலும்
ஊரங்கு சட்டங்களிலும்
ஓரிரண்டாய் தொடங்கி பெருத்த
துப்பாக்கி வேட்டுக்களிலும்
என் கைத்தொலைபேசிக்கு
காலநேரமற்று வந்து கொண்டிருந்த
அழைப்புகளிலும்
அரட்டைகளிலும்
அவள் அங்கேயே ஓரிடத்தில்
குந்தியிருந்துவிட்டாள்
வாகன நெரிசலிலும்
கர்த்தால்களிலும்
ஊரங்கு சட்டங்களிலும்
ஓரிரண்டாய் தொடங்கி பெருத்த
துப்பாக்கி வேட்டுக்களிலும்
என் கைத்தொலைபேசிக்கு
காலநேரமற்று வந்து கொண்டிருந்த
அழைப்புகளிலும்
அரட்டைகளிலும்
அவள் அங்கேயே ஓரிடத்தில்
குந்தியிருந்துவிட்டாள்
வெளிறிவிட்ட அவள் பாவாடையின்
பூக்களின் மீது
குச்சொழுங்கையில் நின்ற
கொண்டலை உலுப்பிவிடுகிறேன்
எப்படியும் அழைத்துவரவேண்டும்
குரும்பட்டிகளை தேடியலைகிறேன்
இந்த ஊரடங்கு சட்டம் முடிவதற்குள்
தறிகெட்டு ஓட நினைக்கும் காலத்தை
அவளின் இரட்டை சடையின்
ரிப்பனாக்கவேண்டும்
பூக்களின் மீது
குச்சொழுங்கையில் நின்ற
கொண்டலை உலுப்பிவிடுகிறேன்
எப்படியும் அழைத்துவரவேண்டும்
குரும்பட்டிகளை தேடியலைகிறேன்
இந்த ஊரடங்கு சட்டம் முடிவதற்குள்
தறிகெட்டு ஓட நினைக்கும் காலத்தை
அவளின் இரட்டை சடையின்
ரிப்பனாக்கவேண்டும்

No comments:
Post a Comment