ஊரடங்கு எடுத்தவுடன்
ஊருக்குள் அத்தனையும்
ஆறுக்கே கடையடியில்
ஆத்துப் பறந்தோடிப்போய்
கொவிட்டு பத்தொன்பது
கொடு நோயினச்சத்திலும்
குத்தரிசி பத்துக்கிலோ
கோதுமை மா அஞ்சுகிலோ
சன்சில்க்கும் சன்லைட்டும்
சமபோசா ஆறேழும்
நூடில்சும் லைபோயும்
நூறுவாய்க்கு விசுக்கோத்தும்
கோடியலும் குளுக்கோசும்
கொறிப்பதற்கும் வேறதும்
வாங்குதற்கு வரிசையிலே
வாய்மூடிக் கட்டிக்கொண்டும்
தேங்கி முட்டித் திரண்டு நீண்டு
தேர்வடத்தை பிடிப்பவர்போல்
வாங்கினால் போதுமென்று
வழிஞ்சு வேர்வை பிசுபிசுக்க
வழமையில் வருகின்ற
வாயிருமல் காறலையும்
இடிக்க செத்தல் வறுக்கும்போது
எழும்பி வரும் தும்மலையும்
அடக்கிப்பிடித்துக் கடையடியில்
அடநாசக் கொரானோவால்
ஆயிரம் பேர்அணிவகுக்க
அதில போய் நானும்நின்று
சோத்துக்கு ருசியென்று
சொதிக்கு கொஞ்சம் நெத்தலியும்
சோயாமீற் ஒன்றிரண்டும்
வாங்கலாமோ என்றெண்ணி
அரக்கியரக்கி போகின்ற
அரையடி இடைவெளியும்
ஆளுக்காள் வைக்காத
வரவழைக்க கொரோனாவை
வாய்ப்பான நெருக்கத்தில்
கெடிகலங்கி போயிருந்து
கிட்டவாய் எட்டுகையில்
இடைக்குள் வந்து இரண்டுமூண்டு
எங்கிருந்தோ வந்து நின்று
கடைக்குள் நிக்கும் பெடியனுக்கு
கனகாலப் பழக்கமாம்
முகத்தை கொஞ்சம் எட்டிக்காட்டி
முன்னால போய்நின்று
வாங்குகிற சாமான்களை
வட்ஸப்பில் போடச்சொல்லி
அப்பதான் ஆருக்கோ
அக்கறையில் தொடர்பெடுத்து
நிக்கிற நிலைகளையும்
இராத்திரியே துண்டொன்றில்
பேத்தியை கூப்பிட்டு
பெனடோல் இஞ்சியென்று
ஒரு சின்ன பட்டியலை
பேனாவால் குறிக்க வைத்து
ஆட்டோவில் வந்திறங்கி
அமைதியாய் காத்திருக்கும்
அறுபது எழுபதையும்
அளந்து வைத்துக்கொண்டு
நடந்து நின்று கிட்டப்போய்
நெத்தலி முடிந்ததென
வார்த்தையுடன் மற்றவற்றை
பற்றிப் பிடித்துக் கொண்டு
பரவாயில்லை கூட்டுக்குள்
சிவப்பி இட்டிருப்பாள்
சிந்தனையில் மகிழ்ந்தபடி
படலையை திறந்தள்ளி
பல வாளி ஊத்தியூத்தி
குளித்து வெயிலிலே
கொரோனாவே போவென்று
நமஸ்காரம் செய்து பின்னே
கூட்டடிக்கும் போய்
கோழிகளை நோட்டமிட்டேன்
ஒன்றுமில்லை இன்றைக்கு
கள்ளன் போல் பதுங்கின
கறுத்தச்சேவலினை
என்ன எனபார்வையால்
ஏறிட்டேன் அப்போது
என்னதான் செய்ய நான்
ஏலுமட்டும் துரத்திப்பார்த்தேன்
கள்ளி சிவத்தப் பேடு
காலுக்குள் நழுவுகிறாள்
பத்து ரூபாய் முட்டைக்காய்
சத்தியமாய் சரிவராதாம்
கொரோனா முடியும் வரை
சரசமொன்றும் வேண்டாமாம்
பேடுரைத்ததாய் பெருமூச்சுடன் சேவல்!
ஊருக்குள் அத்தனையும்
ஆறுக்கே கடையடியில்
ஆத்துப் பறந்தோடிப்போய்
கொவிட்டு பத்தொன்பது
கொடு நோயினச்சத்திலும்
குத்தரிசி பத்துக்கிலோ
கோதுமை மா அஞ்சுகிலோ
சன்சில்க்கும் சன்லைட்டும்
சமபோசா ஆறேழும்
நூடில்சும் லைபோயும்
நூறுவாய்க்கு விசுக்கோத்தும்
கோடியலும் குளுக்கோசும்
கொறிப்பதற்கும் வேறதும்
வாங்குதற்கு வரிசையிலே
வாய்மூடிக் கட்டிக்கொண்டும்
தேங்கி முட்டித் திரண்டு நீண்டு
தேர்வடத்தை பிடிப்பவர்போல்
வாங்கினால் போதுமென்று
வழிஞ்சு வேர்வை பிசுபிசுக்க
வழமையில் வருகின்ற
வாயிருமல் காறலையும்
இடிக்க செத்தல் வறுக்கும்போது
எழும்பி வரும் தும்மலையும்
அடக்கிப்பிடித்துக் கடையடியில்
அடநாசக் கொரானோவால்
ஆயிரம் பேர்அணிவகுக்க
அதில போய் நானும்நின்று
சோத்துக்கு ருசியென்று
சொதிக்கு கொஞ்சம் நெத்தலியும்
சோயாமீற் ஒன்றிரண்டும்
வாங்கலாமோ என்றெண்ணி
அரக்கியரக்கி போகின்ற
அரையடி இடைவெளியும்
ஆளுக்காள் வைக்காத
வரவழைக்க கொரோனாவை
வாய்ப்பான நெருக்கத்தில்
கெடிகலங்கி போயிருந்து
கிட்டவாய் எட்டுகையில்
இடைக்குள் வந்து இரண்டுமூண்டு
எங்கிருந்தோ வந்து நின்று
கடைக்குள் நிக்கும் பெடியனுக்கு
கனகாலப் பழக்கமாம்
முகத்தை கொஞ்சம் எட்டிக்காட்டி
முன்னால போய்நின்று
வாங்குகிற சாமான்களை
வட்ஸப்பில் போடச்சொல்லி
அப்பதான் ஆருக்கோ
அக்கறையில் தொடர்பெடுத்து
நிக்கிற நிலைகளையும்
இராத்திரியே துண்டொன்றில்
பேத்தியை கூப்பிட்டு
பெனடோல் இஞ்சியென்று
ஒரு சின்ன பட்டியலை
பேனாவால் குறிக்க வைத்து
ஆட்டோவில் வந்திறங்கி
அமைதியாய் காத்திருக்கும்
அறுபது எழுபதையும்
அளந்து வைத்துக்கொண்டு
நடந்து நின்று கிட்டப்போய்
நெத்தலி முடிந்ததென
வார்த்தையுடன் மற்றவற்றை
பற்றிப் பிடித்துக் கொண்டு
பரவாயில்லை கூட்டுக்குள்
சிவப்பி இட்டிருப்பாள்
சிந்தனையில் மகிழ்ந்தபடி
படலையை திறந்தள்ளி
பல வாளி ஊத்தியூத்தி
குளித்து வெயிலிலே
கொரோனாவே போவென்று
நமஸ்காரம் செய்து பின்னே
கூட்டடிக்கும் போய்
கோழிகளை நோட்டமிட்டேன்
ஒன்றுமில்லை இன்றைக்கு
கள்ளன் போல் பதுங்கின
கறுத்தச்சேவலினை
என்ன எனபார்வையால்
ஏறிட்டேன் அப்போது
என்னதான் செய்ய நான்
ஏலுமட்டும் துரத்திப்பார்த்தேன்
கள்ளி சிவத்தப் பேடு
காலுக்குள் நழுவுகிறாள்
பத்து ரூபாய் முட்டைக்காய்
சத்தியமாய் சரிவராதாம்
கொரோனா முடியும் வரை
சரசமொன்றும் வேண்டாமாம்
பேடுரைத்ததாய் பெருமூச்சுடன் சேவல்!

No comments:
Post a Comment