Wednesday, April 15, 2020

புரூட்டஸின் இக்கணம்-பொன்.காந்தன்,


ஒரு புரூட்டஸை போல
ஓங்கி ஓங்கி
பல தடவை குத்திற்று கொரோனா
யூலியஸ் சீசர்
மீண்டும் மண்ணில் துவள்கிறார்
கிளாடியேட்டர்களின்
வியர்வையும் வாளும்
ஒரு போரை எதிர்கொள்ள முடியாமல்
கொரானாவின் முன் மண்டியிட்டன
இது பேரவலம்தான்
ரோம சாம்ராஜ்ஜியத்தில்
சிறுநீரில் நறுமணத்துக்காய்
ரோஜா இதழ்கள் ருசித்த
அழகிகளின் சிலைகள் கண்ணீர் வடித்தன
பூமிக்கு நாட்காட்டி தந்தவரின் தேதிகள்
கரிய நாட்களாயின
ஷேக்ஸ்பியர்
ஒரு சோகக்கவிதையை
இன்னும் எழுதி முடிக்கவில்லை
இத்தாலியின் தெருவெங்கும்
ஒரு கதாநாயகனின்
அவலம் நிறைந்த பாத்திரம் அலைகிறது
சவப்பெட்டிகளுகளுக்குள்
யாரும் இருக்கலாம்
இக்கணம் மன்னனாயும் இருக்கலாம்
ஆல்ப்ஸின் இனிய காற்றுக்கும்
அச்சப்படும் இராச்சியங்களை
கொரோனா படைத்தது
ஒரு வித மெளனம்
உலகை ஆட்கொண்டது
எங்கிருந்துமெழும் விம்மல்
இதயங்களை பிளிந்து
ஒரு மரண குவளையில் ஊற்றத்துடிக்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...