ஊரடங்கில்
இந்த சாலைகள் போலவே
இதுவரையில்
நெடு நாட்களாய்
இந்த வீடுகளும் பல
ஏதோ விதத்தில்
வெறிச்சோடிக்கிடந்திருக்கின்றன
இந்த சாலைகள் போலவே
இதுவரையில்
நெடு நாட்களாய்
இந்த வீடுகளும் பல
ஏதோ விதத்தில்
வெறிச்சோடிக்கிடந்திருக்கின்றன
மறுபடியும் கட்டப்படும் வீட்டில்
பள்ளிவிட்டு வந்து
கழற்றி எறியும் சீருடைக்குள்ளிருந்து
மெல்லிய குரல்களை
யார் கேட்க ஆசைப்படக்கூடும்
கிணற்றடியில்
கிழடு பற்றிவிட்ட கமுகு
ஒண்டுக்கு இருக்க ஓடும் கோடிக்குள்
நின்ற நெல்லியின் ஆத்துமா....
பள்ளிவிட்டு வந்து
கழற்றி எறியும் சீருடைக்குள்ளிருந்து
மெல்லிய குரல்களை
யார் கேட்க ஆசைப்படக்கூடும்
கிணற்றடியில்
கிழடு பற்றிவிட்ட கமுகு
ஒண்டுக்கு இருக்க ஓடும் கோடிக்குள்
நின்ற நெல்லியின் ஆத்துமா....
மறக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
பெட்டியிழைக்கும் சத்தகமாயும்
விறாந்தையில்
மீட்டப்படும்
ஏராளம் பழைய புதினங்களில்
செல்பேசிகள்
சில மணித்தியாலயங்கள்
பழசாவதில்
யார் அதிகம் மகிழக்கூடும்
கிழிந்துபோன
ராணி காமிக்ஸ் அம்புலிமாமா
ரமணிசந்திரனின்
மட்டையாக கூட இருக்கலாம்
பெட்டியிழைக்கும் சத்தகமாயும்
விறாந்தையில்
மீட்டப்படும்
ஏராளம் பழைய புதினங்களில்
செல்பேசிகள்
சில மணித்தியாலயங்கள்
பழசாவதில்
யார் அதிகம் மகிழக்கூடும்
கிழிந்துபோன
ராணி காமிக்ஸ் அம்புலிமாமா
ரமணிசந்திரனின்
மட்டையாக கூட இருக்கலாம்
சூட்கேசுக்குள் இருந்து
எழுந்து வரும்
கனகாம்பரம் சூடிய தேவதைகளும்
மினிஸ்க்கேட்டுடன்
சுவர்ணாக்காவும்
லோங்சுடன் பாபுவும்
கிப்பி வதனாவும்
ஊரடங்கை மீறினாலும் அழகுதான்
எழுந்து வரும்
கனகாம்பரம் சூடிய தேவதைகளும்
மினிஸ்க்கேட்டுடன்
சுவர்ணாக்காவும்
லோங்சுடன் பாபுவும்
கிப்பி வதனாவும்
ஊரடங்கை மீறினாலும் அழகுதான்
நகர விடுதிகளிலும்
ஓடும் இரயிலிலும்
இப்போது தூங்கிவழியும்
ஒரு சாப்ற்வெயார் எஞ்சினியருக்கு
ஒரு அச்சாச் சட்டை போட்டு
திருஸ்டிப் பொட்டு வைத்து
அம்மாவின் மேல்
கால்போட்டு தூங்க வைக்க
இப்போது இந்த வீடு
ஓம குண்டத்தையும்
நடுவிலே வளர்த்திருக்கிறது
ஓடும் இரயிலிலும்
இப்போது தூங்கிவழியும்
ஒரு சாப்ற்வெயார் எஞ்சினியருக்கு
ஒரு அச்சாச் சட்டை போட்டு
திருஸ்டிப் பொட்டு வைத்து
அம்மாவின் மேல்
கால்போட்டு தூங்க வைக்க
இப்போது இந்த வீடு
ஓம குண்டத்தையும்
நடுவிலே வளர்த்திருக்கிறது
இப்போது
கொள்ளைநோயால்
ஊரடங்கில் முடங்கியிருக்கும்
நீண்ட நாட்களில்
வளவில் முன்பு
ஒரு பருவத்தில் சோழனும் கச்சானும்
எள்ளும் பூத்துக்குலுங்கிய
தோட்ட நிலத்தில்
ஒரு நாளேனும் வெருளியாயும்
நின்று சிரிக்க மனசு தவறாது
கொள்ளைநோயால்
ஊரடங்கில் முடங்கியிருக்கும்
நீண்ட நாட்களில்
வளவில் முன்பு
ஒரு பருவத்தில் சோழனும் கச்சானும்
எள்ளும் பூத்துக்குலுங்கிய
தோட்ட நிலத்தில்
ஒரு நாளேனும் வெருளியாயும்
நின்று சிரிக்க மனசு தவறாது
அப்போது புதிய வீடு
கட்டி முடிந்திருக்க கூடும்
கட்டி முடிந்திருக்க கூடும்

No comments:
Post a Comment