இங்கயும் கொரோனாதான்
இடங்கள் வெறிச்சோடித்தான்
எங்கதான் வெடித்தாலும்
இரைஞ்சு டிரக் வந்தாலும்
கர்த்தால் கரிநாளன்று
காட்டு ஐசியென்றிழுத்து
நான்கு அறை போட்டாலும்
லாம்புக்காலத்திலும்
லைற்று வர முன்னேயும்
இரும்பு வாகனத்தில்
இங்காலதான் ஆமியென
வதந்தி நூறு வந்து
வாசலிலே நிறைந்தாலும்
படங்கை விரித்துவிட்டு
பயில்வான் நாயுடனே
முழங்கை தலகணியாய்
மூச்சுக்குள் மாவரசி
இடைஞ்சல் இனிமையாகி
எப்போதும் கடைக்குள்ளே
இராப்பகலை கழிக்கின்ற
கணேசு குணத்தான்கள்
அரக்கி ஒற்றைக் கதவில்
அறிஞ்ச தெரிஞ்சவைக்கு
அரைக்கிலோ காக்கிலோ
வாங்கோவென சிரித்து
வாசலை கொஞ்சம் நீக்கி
பென்சன்வர தாங்கோவென
பிறகும் எடுப்பமென்றும்
கொஞ்சமோ கூடவோ
லாம்பெண்ணை லாவோஜி
சாப்பாட்டுக்கும் ஏதும்
விசுக்கோத்தும் விக்சும்
வெத்திலை கூறும் வித்து
எப்பவும் திறந்திருப்பர்
இப்போது கொரோனாவில்
சிக்குண்டால் என அஞ்சி
ஏழெட்டு நாளாக
எப்போதும் கடை பூட்டு
அப்படியோர் நிலையில்
ஊர்ப்பக்கம் ஒடுங்கிவிட
கிழவி
அவதான் உன் கொம்மா
ஐந்தாறு நாட்களாய்
அரைவயிறும் கால் வயிறும்
அறைக்குள்ளே கறிசாமான்
அத்தனையுமுண்டு
என்னென்று விசாரித்தால்
இரைஞ்சபடி றேடியோவில்
இறந்தவர்கள் கொரானாவால்
இலண்டன்
பிரான்சுப் பக்கத்தில்
எக்கச் சக்கம் எனக்கேட்டு
அங்கதானே மகன் பிள்ளை
அம்மா இங்கு ஏங்குகிறாள்
கவனமாய் இருங்கோவடா
பெடிச்சியள் நீங்களும்தான்
இடங்கள் வெறிச்சோடித்தான்
எங்கதான் வெடித்தாலும்
இரைஞ்சு டிரக் வந்தாலும்
கர்த்தால் கரிநாளன்று
காட்டு ஐசியென்றிழுத்து
நான்கு அறை போட்டாலும்
லாம்புக்காலத்திலும்
லைற்று வர முன்னேயும்
இரும்பு வாகனத்தில்
இங்காலதான் ஆமியென
வதந்தி நூறு வந்து
வாசலிலே நிறைந்தாலும்
படங்கை விரித்துவிட்டு
பயில்வான் நாயுடனே
முழங்கை தலகணியாய்
மூச்சுக்குள் மாவரசி
இடைஞ்சல் இனிமையாகி
எப்போதும் கடைக்குள்ளே
இராப்பகலை கழிக்கின்ற
கணேசு குணத்தான்கள்
அரக்கி ஒற்றைக் கதவில்
அறிஞ்ச தெரிஞ்சவைக்கு
அரைக்கிலோ காக்கிலோ
வாங்கோவென சிரித்து
வாசலை கொஞ்சம் நீக்கி
பென்சன்வர தாங்கோவென
பிறகும் எடுப்பமென்றும்
கொஞ்சமோ கூடவோ
லாம்பெண்ணை லாவோஜி
சாப்பாட்டுக்கும் ஏதும்
விசுக்கோத்தும் விக்சும்
வெத்திலை கூறும் வித்து
எப்பவும் திறந்திருப்பர்
இப்போது கொரோனாவில்
சிக்குண்டால் என அஞ்சி
ஏழெட்டு நாளாக
எப்போதும் கடை பூட்டு
அப்படியோர் நிலையில்
ஊர்ப்பக்கம் ஒடுங்கிவிட
கிழவி
அவதான் உன் கொம்மா
ஐந்தாறு நாட்களாய்
அரைவயிறும் கால் வயிறும்
அறைக்குள்ளே கறிசாமான்
அத்தனையுமுண்டு
என்னென்று விசாரித்தால்
இரைஞ்சபடி றேடியோவில்
இறந்தவர்கள் கொரானாவால்
இலண்டன்
பிரான்சுப் பக்கத்தில்
எக்கச் சக்கம் எனக்கேட்டு
அங்கதானே மகன் பிள்ளை
அம்மா இங்கு ஏங்குகிறாள்
கவனமாய் இருங்கோவடா
பெடிச்சியள் நீங்களும்தான்

No comments:
Post a Comment