Wednesday, April 15, 2020

நறுமுகை அவிழ்க்கும் போர்-பொன்.காந்தன்,


புதிது
கடவுள் நட்ட மரத்தில்
பூத்தது உன் புன்னகை
வனவாசம் தொலைத்தவனின்
முதல் வாசமாய் நாசிகளின் முற்றத்தை
அலங்கரிக்கும் ஒற்றைசெடியாய்
ஏனோ தெரியவில்லை
பிரபஞ்சத்தை விளக்குமாற்றால்
இரண்டு தட்டு தட்டினன்
மகரந்தம் தழுவுமொரு
மெல்லிய பறவையின் வரவில்
வாசலிலொரு கோலம்
ஊறுபடாத் தேனின்
உதடு கவ்வி தெளிக்கச் சிலிர்க்கும்
நறுமுகை அவிழ்க்கும் போர்
இனித்தினமும் அர்த்தசாமம் கடந்தும்
புதிது
கனி பறித்தல்
கிளைகளுக்குள் விரல் நெளிதல்
யாவும்
தனியொரு ராச்சியத்தின் அந்தப்புரம்
கடவுள் நட்ட மரத்தின்
அடி பரவும் தாகத்தில்
வனவாசம் தொலைத்தவனின்
பிரவாகம் நிரம்பும் கிளர்தல் படர்தல்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...