என்னிடம் அது இல்லை
இல்லாத ஒன்றை காட்டென்றால்
எப்படி காட்டுவேன்
இல்லாத ஒன்றை காட்டென்றால்
எப்படி காட்டுவேன்
அது இருப்பதாகத் செல்பவர்களிடம்
கேட்டுப் பார்த்தேன்
அதற்கு ஆளுக்காள்
வேறுவேறு மாதிரி விளக்கம் சொல்கிறார்
கேட்டுப் பார்த்தேன்
அதற்கு ஆளுக்காள்
வேறுவேறு மாதிரி விளக்கம் சொல்கிறார்
உண்மையில்
அது பலரிடம் இல்லையென்றே எண்ணுகிறேன்
இல்லாத ஒன்றை கொண்டாட
பலரும் பழகிப்போனார்கள்
அது பலரிடம் இல்லையென்றே எண்ணுகிறேன்
இல்லாத ஒன்றை கொண்டாட
பலரும் பழகிப்போனார்கள்
இல்லாத ஒன்றுக்கு
கொடிகள் பறக்கவிட்டு
இல்லாத ஒன்றுக்கு கீதமிசைக்கவும்
இல்லாத ஒன்றுக்காய் அணிவகுக்கவும்
எப்படியோ பழக்கப்பட்டுவிட்டார்கள்
கொடிகள் பறக்கவிட்டு
இல்லாத ஒன்றுக்கு கீதமிசைக்கவும்
இல்லாத ஒன்றுக்காய் அணிவகுக்கவும்
எப்படியோ பழக்கப்பட்டுவிட்டார்கள்
இருந்தது இழந்ததை பற்றி
கவலைப்படும் நாட்களை தொலையவிட்டு
இல்லாததை கொண்டாடும் ஒரு நாளை
எப்படி அழைக்கலாம்
அதன் கொடிகளை எப்படி இறக்கலாம்
எங்கே தொலைக்கலாம்
கவலைப்படும் நாட்களை தொலையவிட்டு
இல்லாததை கொண்டாடும் ஒரு நாளை
எப்படி அழைக்கலாம்
அதன் கொடிகளை எப்படி இறக்கலாம்
எங்கே தொலைக்கலாம்
தெருவோரக் கொடி கம்பங்களுக்கிடையில்
தொலைகின்ற
ஒரு குட்டை நாயின் இருப்பை
எவர் உணர்வீர்
தொலைகின்ற
ஒரு குட்டை நாயின் இருப்பை
எவர் உணர்வீர்
எவர் பாடுவர்
உண்மைச் சுதந்திர கீதம்
உண்மைச் சுதந்திர கீதம்

No comments:
Post a Comment