வண்டி கட்டிப்போய்
வாழைக்குலை இறக்கி
கண்டி லொறிக்கேத்தி
கொண்டையை முடிஞ்சபடி
கோமளம் சொன்னதெல்லாம்
மல்லி செத்தலுடன்
பண்டி வத்தலும் வாங்கி
பவளத்தின் புருசனையும் ஏத்தி
அந்திப் பொழுதருகாய்
ஆடி அசைஞ்சு
கண்டி வீதியிலறங்கி
கடக்குப் புடக்கெண்டு
இடையில்
மண்டி ஊதி ஊதி
நேற்றையதும் கலந்ததை
நிண்ட நிலையில்
வண்டு ஊதி ஊதியிழுத்து
வண்டிலைக் கிளப்பி மீண்டும்
வைரவர் கோயிலடிக்குளத்தில்
விழுந்து முங்கி எழும்பி
சந்திக் கறுப்பையாவுடன்
சமா வச்சு குளித்து
முன்னிரா வரும் வேளை
முடக்கில் திரும்பும் போது
வண்டில் படலை திறந்து
கோமளம் இப்பவோ
நாலு மணியென்றிழுத்தபடி
வாசலில் நிற்க
மண்டிக் கள்ளுவெறி
கொஞ்சம் முறியும்
சண்டியவிழத்து
சக்கப்பணிய இருந்து
சாப்பிட்டெழும்ப
அன்றிரா இனிக்கும்
அதைவிட வேறன்ன
இன்று கிழிச்சம்
வாழ்வின்
மண்டியை மீண்டும் எடுத்து
மாந்துது மனசு இன்று
வாழைக்குலை இறக்கி
கண்டி லொறிக்கேத்தி
கொண்டையை முடிஞ்சபடி
கோமளம் சொன்னதெல்லாம்
மல்லி செத்தலுடன்
பண்டி வத்தலும் வாங்கி
பவளத்தின் புருசனையும் ஏத்தி
அந்திப் பொழுதருகாய்
ஆடி அசைஞ்சு
கண்டி வீதியிலறங்கி
கடக்குப் புடக்கெண்டு
இடையில்
மண்டி ஊதி ஊதி
நேற்றையதும் கலந்ததை
நிண்ட நிலையில்
வண்டு ஊதி ஊதியிழுத்து
வண்டிலைக் கிளப்பி மீண்டும்
வைரவர் கோயிலடிக்குளத்தில்
விழுந்து முங்கி எழும்பி
சந்திக் கறுப்பையாவுடன்
சமா வச்சு குளித்து
முன்னிரா வரும் வேளை
முடக்கில் திரும்பும் போது
வண்டில் படலை திறந்து
கோமளம் இப்பவோ
நாலு மணியென்றிழுத்தபடி
வாசலில் நிற்க
மண்டிக் கள்ளுவெறி
கொஞ்சம் முறியும்
சண்டியவிழத்து
சக்கப்பணிய இருந்து
சாப்பிட்டெழும்ப
அன்றிரா இனிக்கும்
அதைவிட வேறன்ன
இன்று கிழிச்சம்
வாழ்வின்
மண்டியை மீண்டும் எடுத்து
மாந்துது மனசு இன்று

No comments:
Post a Comment