எட்டில் நில் கொஞ்சம்
எரிஞ்சு விழுந்துது கிழவி
வட்டக்கடியே எனக்கு
வடிவு இல்லையே ஆச்சி
தட்டிக்கழிக்கிறாயே
தள்ளி நின்று கேட்டேன்
கொட்டி விடுவன் பல்லை
கொரோனாவாம் தெரியாதே
முட்டிக் கொண்டு நின்றால்
மொய்ச்சுப் பிடிச்சிடுமாம்
மூக்கை அங்க திருப்பு
மூடிக் கட்டு வாயை
வாங்கிக் கட்டப்போறாய்
காட்டு கொண்டை ஒருக்கால்
கையை வடிவாய் கழுவு
சோப்பு வாங்கி அடுக்கு
சூழல் தெரியாதே
ஸ்கூட்டி ஓடும் சுமதி
நேற்று ஓடிப் போய்
வீட்டுக்குள்ள பெற்றோல்
வேண்டி நிரப்பினாளாம்
ஆட்டிப் பாத்து ராங்கை
அதுக்கும் ஊத்தினாளாம்
சோட்டியோடு வசந்தி
ஆட்டோ பிடித்துப்போய்
சுப்பர் மாக்கெற்றில்
ஓட்டி எடுக்கும் காட்டில்
ஊருப்பட்ட சாமான்
ராக்கையெல்லாம் தடவி
வாங்கிக் குவிச்சுப்பிறகு
ரக்ரர் பிடிச்சுத்தான்
ஏத்தி இறக்கினாவாம்
எதுவும் தெரியாதே பெடியா
நீட்டி வளைஞ்சு கியூவாம்
நிக்க இடமில்லையாம்
ஓடு பட்டு விடிய
புரியனோடு போன பேத்தி
மாலைவரை நிண்டு
மாசீனி வாங்கி எடுக்க
வாய்க்கு அடிச்ச லிப்ஸ்ரிக்
வழிஞ்சு கரைஞ்சு போய்
கால் நகத்தில் சிந்தி
கடும் சிவப்பாய் போச்சாம்
இரவு வந்து நிண்டு
இளவு கொரானாவென்றாள்
சந்தியடியில் கூடி
குந்தி இருந்து கொண்டு
சிந்து போகும்போது
சீக்காய் அடிக்கின்ற
வெம்பிப்பழுத்த சிலதை
இன்று காணவில்லை
எல்லாம் கொரானாப்பயம்தான்
தம்பி அஞ்சாறு நாளைக்கு
ஆள் நடமாட்டாம் இருக்காது
அறுபத்தைஞ்சாம் கலியாணமாம்
ஆறுமுகத்தார் சொன்னவர்
எப்பிடித்தான் போக நான்
என்ன நினைப்பினமோ
ஏரிஎம்மிலும் லைனாம்
என்னத்தை சொல்லத்தம்பி
பக்கத்து படலைகூட
இண்டு முழுக்கப் பூட்டு
பத்துவெத்திலையை கூடத்தா
பாக்கிலையும் பாத்துப்போடு
மிக்சர் பைக்கற் அஞ்சைத்தா
மிச்சக்காசுக்கும் ஏதும் தா
எட்டி நடந்தது கிழவி
என்ர கடவுளே
வுகானில் கூட
உப்பிடி இல்லை
எரிஞ்சு விழுந்துது கிழவி
வட்டக்கடியே எனக்கு
வடிவு இல்லையே ஆச்சி
தட்டிக்கழிக்கிறாயே
தள்ளி நின்று கேட்டேன்
கொட்டி விடுவன் பல்லை
கொரோனாவாம் தெரியாதே
முட்டிக் கொண்டு நின்றால்
மொய்ச்சுப் பிடிச்சிடுமாம்
மூக்கை அங்க திருப்பு
மூடிக் கட்டு வாயை
வாங்கிக் கட்டப்போறாய்
காட்டு கொண்டை ஒருக்கால்
கையை வடிவாய் கழுவு
சோப்பு வாங்கி அடுக்கு
சூழல் தெரியாதே
ஸ்கூட்டி ஓடும் சுமதி
நேற்று ஓடிப் போய்
வீட்டுக்குள்ள பெற்றோல்
வேண்டி நிரப்பினாளாம்
ஆட்டிப் பாத்து ராங்கை
அதுக்கும் ஊத்தினாளாம்
சோட்டியோடு வசந்தி
ஆட்டோ பிடித்துப்போய்
சுப்பர் மாக்கெற்றில்
ஓட்டி எடுக்கும் காட்டில்
ஊருப்பட்ட சாமான்
ராக்கையெல்லாம் தடவி
வாங்கிக் குவிச்சுப்பிறகு
ரக்ரர் பிடிச்சுத்தான்
ஏத்தி இறக்கினாவாம்
எதுவும் தெரியாதே பெடியா
நீட்டி வளைஞ்சு கியூவாம்
நிக்க இடமில்லையாம்
ஓடு பட்டு விடிய
புரியனோடு போன பேத்தி
மாலைவரை நிண்டு
மாசீனி வாங்கி எடுக்க
வாய்க்கு அடிச்ச லிப்ஸ்ரிக்
வழிஞ்சு கரைஞ்சு போய்
கால் நகத்தில் சிந்தி
கடும் சிவப்பாய் போச்சாம்
இரவு வந்து நிண்டு
இளவு கொரானாவென்றாள்
சந்தியடியில் கூடி
குந்தி இருந்து கொண்டு
சிந்து போகும்போது
சீக்காய் அடிக்கின்ற
வெம்பிப்பழுத்த சிலதை
இன்று காணவில்லை
எல்லாம் கொரானாப்பயம்தான்
தம்பி அஞ்சாறு நாளைக்கு
ஆள் நடமாட்டாம் இருக்காது
அறுபத்தைஞ்சாம் கலியாணமாம்
ஆறுமுகத்தார் சொன்னவர்
எப்பிடித்தான் போக நான்
என்ன நினைப்பினமோ
ஏரிஎம்மிலும் லைனாம்
என்னத்தை சொல்லத்தம்பி
பக்கத்து படலைகூட
இண்டு முழுக்கப் பூட்டு
பத்துவெத்திலையை கூடத்தா
பாக்கிலையும் பாத்துப்போடு
மிக்சர் பைக்கற் அஞ்சைத்தா
மிச்சக்காசுக்கும் ஏதும் தா
எட்டி நடந்தது கிழவி
என்ர கடவுளே
வுகானில் கூட
உப்பிடி இல்லை

No comments:
Post a Comment