முகமூடி அணிந்த கடவுள்களை முன்னே பார்த்தேன்
கண்ணுறக்கமற்று கவனிக்கும் நைற்றிங்கேள்களை
கண்ணிலொற்றிக் கொள்கிறேன்
நர்ஸ் ஒருத்தியை கண்டு
நதியா போலழகென
நாலு கவிதை எழுதினேன்
இப்போது தான் புரிகிறது
கடவுளோடு சேர்த்து வைத்தும்
அவள் கால்களை பூசிக்க வேண்டுமென
இப்போது
பக்கத்து வீட்டு நர்ஸ் பெட்டையை பார்க்கையில்
ஒரு கையில் இன்ஜெக்சனோடும்
மறு கையில் மாஸ்க்கோடும் தோன்றும்
மானுடக்கடவுளாய் தெரிகிறாள்
மலர்க்கொத்தொன்றை
அவளை விட வேறு யாருக்கும்
தொண்டினில் சிலிர்த்து
பஞ்ச வர்ணக் குதிரையில் போய்
இப்போது பரிசளிக்க முடியாது
சில காலங்களில்
தாதிகளுக்கும் வைத்தியர்களுக்கும்
இயற்கை இரவு பகலை கொடுப்பதில்லை
தூக்கமென்பதை தொலைத்த அந்த விழிகள்
மீண்டும் அதை தேடுவதுமில்லை
காக்குமென் காவலரேயெனும்
சிவபுராண வரி
தாதிகளை விட வேறு யாருக்கும் ஒட்டாது
சில
தாதிகளை காணும் போது
படுக்கையிலிருக்கும் பேஸன்றுக்கு
பட்டாம் பூச்சிகள் பறப்பதும் உண்டு
உண்மைதான்
எட்டோ பத்தோ நாளில்
அந்த பட்டாம் பூச்சிகள் பலதை
கொரோனாவும்
கொத்தி சென்றது எட்டாத உயரத்துக்கு
கிட்டவராதே கொள்ளை நோயாளியென
பதறுகின்ற உலகத்தில்
தொட்டுப் பணியாற்றும்
இந்தத் துறவிகளை எப்படி எழுத
பூமிக்கு ஆயுள் அதிகம்
இதை தாதிகளின் ஈகத்திலெழுதுகிறேன்
குணமடைந்து நோயாளி புறப்படுகையில்
சொந்தமொன்றை பிரிவதாய்
கண்களில் ஈரம்வர வைக்க
தாதிகளை விட வேறு யாராலும் முடியாது
இத்தாலிக்கும்
இங்கே கஸ்தூரியார் வீதிக்கும்
கடவுள் இப்போது ஒன்றே ஒன்றுதான்
மருத்துவரும் தாதியுமே
எல்லா தேசங்களிலும்
கொள்ளை நோய்க்கு காப்பரணாகி
களச்சாவடைந்த
அத்தனை துணிச்சலுக்கும் கருணைக்குமாய்
கண் கலங்குகிறேன்
மலர்களை காணிக்கையாக்குகிறேன்
கண்ணுறக்கமற்று கவனிக்கும் நைற்றிங்கேள்களை
கண்ணிலொற்றிக் கொள்கிறேன்
நர்ஸ் ஒருத்தியை கண்டு
நதியா போலழகென
நாலு கவிதை எழுதினேன்
இப்போது தான் புரிகிறது
கடவுளோடு சேர்த்து வைத்தும்
அவள் கால்களை பூசிக்க வேண்டுமென
இப்போது
பக்கத்து வீட்டு நர்ஸ் பெட்டையை பார்க்கையில்
ஒரு கையில் இன்ஜெக்சனோடும்
மறு கையில் மாஸ்க்கோடும் தோன்றும்
மானுடக்கடவுளாய் தெரிகிறாள்
மலர்க்கொத்தொன்றை
அவளை விட வேறு யாருக்கும்
தொண்டினில் சிலிர்த்து
பஞ்ச வர்ணக் குதிரையில் போய்
இப்போது பரிசளிக்க முடியாது
சில காலங்களில்
தாதிகளுக்கும் வைத்தியர்களுக்கும்
இயற்கை இரவு பகலை கொடுப்பதில்லை
தூக்கமென்பதை தொலைத்த அந்த விழிகள்
மீண்டும் அதை தேடுவதுமில்லை
காக்குமென் காவலரேயெனும்
சிவபுராண வரி
தாதிகளை விட வேறு யாருக்கும் ஒட்டாது
சில
தாதிகளை காணும் போது
படுக்கையிலிருக்கும் பேஸன்றுக்கு
பட்டாம் பூச்சிகள் பறப்பதும் உண்டு
உண்மைதான்
எட்டோ பத்தோ நாளில்
அந்த பட்டாம் பூச்சிகள் பலதை
கொரோனாவும்
கொத்தி சென்றது எட்டாத உயரத்துக்கு
கிட்டவராதே கொள்ளை நோயாளியென
பதறுகின்ற உலகத்தில்
தொட்டுப் பணியாற்றும்
இந்தத் துறவிகளை எப்படி எழுத
பூமிக்கு ஆயுள் அதிகம்
இதை தாதிகளின் ஈகத்திலெழுதுகிறேன்
குணமடைந்து நோயாளி புறப்படுகையில்
சொந்தமொன்றை பிரிவதாய்
கண்களில் ஈரம்வர வைக்க
தாதிகளை விட வேறு யாராலும் முடியாது
இத்தாலிக்கும்
இங்கே கஸ்தூரியார் வீதிக்கும்
கடவுள் இப்போது ஒன்றே ஒன்றுதான்
மருத்துவரும் தாதியுமே
எல்லா தேசங்களிலும்
கொள்ளை நோய்க்கு காப்பரணாகி
களச்சாவடைந்த
அத்தனை துணிச்சலுக்கும் கருணைக்குமாய்
கண் கலங்குகிறேன்
மலர்களை காணிக்கையாக்குகிறேன்

No comments:
Post a Comment