அன்னமேரி வீட்டுக்கு
ஒரு நாள் நானும்
எங்கள் வீட்டுக்கு
ஒரு நாள் அன்னமேரியும்
வந்து போகும்போது
அதுதான் பண்டிகையானது
ஒரு நாள் நானும்
எங்கள் வீட்டுக்கு
ஒரு நாள் அன்னமேரியும்
வந்து போகும்போது
அதுதான் பண்டிகையானது
புதுக்காற்சட்டை பார்த்து
அன்னமேரி
வாயைபொத்தி விழி விரிப்பதும்
அன்னமேரியின்
புதுப் பூப்போட்ட பாவடைக்கு
எதையும் சொல்ல தெரியாமல்
கூச்சப்பட்டு நின்றதும்தான்
அழகான பண்டிகையானது
அன்னமேரி
வாயைபொத்தி விழி விரிப்பதும்
அன்னமேரியின்
புதுப் பூப்போட்ட பாவடைக்கு
எதையும் சொல்ல தெரியாமல்
கூச்சப்பட்டு நின்றதும்தான்
அழகான பண்டிகையானது
இப்போதும் இனித்துக்கொண்டிருப்பது
முற்றத்தில்
நாயை பிடித்தபடி நான் நிற்க
அன்னமேரி
குசினுக்குள் அம்மாவிடம்
கொடுத்துவிட்டுபோனவைதான்
முற்றத்தில்
நாயை பிடித்தபடி நான் நிற்க
அன்னமேரி
குசினுக்குள் அம்மாவிடம்
கொடுத்துவிட்டுபோனவைதான்
அன்னமேரியின் நாட்களில்
லூசியா வீடுவரை இருக்கும்
சாலையைப்போல
கனவுகளிலும் வந்து
இளங்கோவும் சதீசும் சிவாவும் கேதீசும்
போய்வரக்கேட்கும்
அலாதியான பயணத்தை எதுவும்தராது
லூசியா வீடுவரை இருக்கும்
சாலையைப்போல
கனவுகளிலும் வந்து
இளங்கோவும் சதீசும் சிவாவும் கேதீசும்
போய்வரக்கேட்கும்
அலாதியான பயணத்தை எதுவும்தராது
அடிப்பெட்டிக்குள் கிடக்கும்
கசங்கிப்போன
பூப்போட்ட பாவாடையை
அன்னமேரி கிளறும்
ஆவல்கள் புதைந்துபோன
சாலை நெரிசலுக்குள்
எப்படியோ
பூவரசம் இலை நுனிகிள்ளி
வாயில் நன்னியிபடி
கெந்திப்போகும்
சிறுவனும் தொலைந்தான்
கசங்கிப்போன
பூப்போட்ட பாவாடையை
அன்னமேரி கிளறும்
ஆவல்கள் புதைந்துபோன
சாலை நெரிசலுக்குள்
எப்படியோ
பூவரசம் இலை நுனிகிள்ளி
வாயில் நன்னியிபடி
கெந்திப்போகும்
சிறுவனும் தொலைந்தான்
எல்லா வலிகளையும்
லூசியா வீடு போய் திரும்பும்போது
சிறாணியின் அம்மா தந்த
கைவிசேச
சில்லறைக்கு வாங்கிய
பபுல்கத்துள் இருக்கும்
அழகிய ஸ்ரிக்கரால்
ஒட்டி மறைத்துக்கொள்கிறேன்
லூசியா வீடு போய் திரும்பும்போது
சிறாணியின் அம்மா தந்த
கைவிசேச
சில்லறைக்கு வாங்கிய
பபுல்கத்துள் இருக்கும்
அழகிய ஸ்ரிக்கரால்
ஒட்டி மறைத்துக்கொள்கிறேன்

No comments:
Post a Comment