இன்று விளக்கீடு
நாரிப்பிடிப்பெனினும்
வேலியைப் பிடித்தபடி
வீதியை பார்த்தால்
ஒரே செகசோதி
காதோரத்து
சில நரை கடந்து
ஓடிப்பிடித்து விளையாடுகிறது
உள்ளுக்குள் நினைவுகள்
வானத்தில் கூட
ஊதிப்பெருத்து இன்று
ஒழுங்காய் இருக்கிறது நிலவும்
பாதித் தேங்காய் பின்
எத்தனை பழைய கதை
சாறிப் பிடித்த
பாத்தியுடைத்து சளித்து
பார்த்துச் சரையொதுக்கி
காத்துக்கு கொஞ்சம் சரிந்ததாய்
காய்குலை இல்லாமல்
சோத்தி என்றாலும்
கொஞ்சம் இடைபெருத்து
மடலை உரித்தால்
நடிகை சில்க்காய்
பார்க்க வடிவாயும்
வளவுக்கு முன்
நட்டுவைக்கவொரு
வாழைக்குத்தி வெட்டி
பக்கத்தை வீட்டைவிட
பார்வைக்கு கொஞ்சம்
எடுப்பாய் நிமிர்த்தி
வெழுத்த பழைய வேட்டியெடுத்து
கிழித்து
முழுக்க ஊறவிட்டு
நொழுக்க நொழுக்கென்று
அது ஒரு பக்கம்
உழுத்து விழுந்த பாளை எடுத்து
ஏழெட்டாய் கிழித்து
கழுத்தாவடியிருந்து
துணி சுத்தி பந்தமாக்கி
அதையும் கவிட்டு எண்ணெயில்
கசிந்து பாளை ஒழுகும்வரை வைத்து
வானம் சிவந்து பொழுது சாய்ந்து
மம்மல் கரைய
முன்னால் படலையில்
பாதித் தேங்காய் வைத்து
பத்தவைத்துவிட்டு
குத்தி கோடிக்குள்
பாளையும் எரியவிட்டு
சுத்தி வளவு முழுக்க கொழுத்தி
பத்தி எரியத் தெருவில்
பவனிவரும்போது
முத்தையர் வீட்டுக்கு முன்
அன்றைக்கென்று அவள்
கொண்டைக்கும் ஒரு செவ்வந்தி வைத்து
குஞ்சமொன்று
கூந்தல் முடிவில் கட்டி
பஞ்சமில்லாமல்
பாவாடை தாவணியில் அழகை
அந்த பளபளத்தெரியும்
அளவான வாழைக்குத்திமுன்
இளமானை போல நின்று கொட்டி
சொண்டுக்குள்ளும்
ஒரு சுந்தரப்புன்னகையொன்றை
செருகி வைத்தபடி
சுழன்று விழிகள் நடனமாட
மண்டைக்கண்ணால் பார்க்கும்
தகப்பன்
முத்தையரின் கரவுக்குள்
சிக்குப்படாமல்
ஏதோ அப்பதான்
அதால போவதுபோல்
பத்துத்தரத்துக்கு மேல்
விட்டுவிட்டு அடிக்கடி
அந்த விளக்கீட்டு வீதி கடந்த
இள வட்டங்களை நினைத்தால்
ஆகா நெஞ்சுக்குள் ஒரு விளக்கு
எண்ணையின்றி
எத்தனை அழகாய் எரியும்
ஆற்றை குத்தியிலும்
எரியும் விளக்கீட்டை விட
முத்தையரின் வாசல் குத்தி
விக்கி விக்கியென்றாலும்
விடியும்வரையும் எரியுமென்று
பந்தயம் கட்டிய பயலுகளே
எங்க இருக்கிறியள் இப்ப
மேல தெரியும்
பூரண நிலவுக்கு
புதினங்களை சொல்லிவிடுங்கள்
அந்தப் பாதித்தேங்காய்
பத்திரமாய் உள்ளதென!
நாரிப்பிடிப்பெனினும்
வேலியைப் பிடித்தபடி
வீதியை பார்த்தால்
ஒரே செகசோதி
காதோரத்து
சில நரை கடந்து
ஓடிப்பிடித்து விளையாடுகிறது
உள்ளுக்குள் நினைவுகள்
வானத்தில் கூட
ஊதிப்பெருத்து இன்று
ஒழுங்காய் இருக்கிறது நிலவும்
பாதித் தேங்காய் பின்
எத்தனை பழைய கதை
சாறிப் பிடித்த
பாத்தியுடைத்து சளித்து
பார்த்துச் சரையொதுக்கி
காத்துக்கு கொஞ்சம் சரிந்ததாய்
காய்குலை இல்லாமல்
சோத்தி என்றாலும்
கொஞ்சம் இடைபெருத்து
மடலை உரித்தால்
நடிகை சில்க்காய்
பார்க்க வடிவாயும்
வளவுக்கு முன்
நட்டுவைக்கவொரு
வாழைக்குத்தி வெட்டி
பக்கத்தை வீட்டைவிட
பார்வைக்கு கொஞ்சம்
எடுப்பாய் நிமிர்த்தி
வெழுத்த பழைய வேட்டியெடுத்து
கிழித்து
முழுக்க ஊறவிட்டு
நொழுக்க நொழுக்கென்று
அது ஒரு பக்கம்
உழுத்து விழுந்த பாளை எடுத்து
ஏழெட்டாய் கிழித்து
கழுத்தாவடியிருந்து
துணி சுத்தி பந்தமாக்கி
அதையும் கவிட்டு எண்ணெயில்
கசிந்து பாளை ஒழுகும்வரை வைத்து
வானம் சிவந்து பொழுது சாய்ந்து
மம்மல் கரைய
முன்னால் படலையில்
பாதித் தேங்காய் வைத்து
பத்தவைத்துவிட்டு
குத்தி கோடிக்குள்
பாளையும் எரியவிட்டு
சுத்தி வளவு முழுக்க கொழுத்தி
பத்தி எரியத் தெருவில்
பவனிவரும்போது
முத்தையர் வீட்டுக்கு முன்
அன்றைக்கென்று அவள்
கொண்டைக்கும் ஒரு செவ்வந்தி வைத்து
குஞ்சமொன்று
கூந்தல் முடிவில் கட்டி
பஞ்சமில்லாமல்
பாவாடை தாவணியில் அழகை
அந்த பளபளத்தெரியும்
அளவான வாழைக்குத்திமுன்
இளமானை போல நின்று கொட்டி
சொண்டுக்குள்ளும்
ஒரு சுந்தரப்புன்னகையொன்றை
செருகி வைத்தபடி
சுழன்று விழிகள் நடனமாட
மண்டைக்கண்ணால் பார்க்கும்
தகப்பன்
முத்தையரின் கரவுக்குள்
சிக்குப்படாமல்
ஏதோ அப்பதான்
அதால போவதுபோல்
பத்துத்தரத்துக்கு மேல்
விட்டுவிட்டு அடிக்கடி
அந்த விளக்கீட்டு வீதி கடந்த
இள வட்டங்களை நினைத்தால்
ஆகா நெஞ்சுக்குள் ஒரு விளக்கு
எண்ணையின்றி
எத்தனை அழகாய் எரியும்
ஆற்றை குத்தியிலும்
எரியும் விளக்கீட்டை விட
முத்தையரின் வாசல் குத்தி
விக்கி விக்கியென்றாலும்
விடியும்வரையும் எரியுமென்று
பந்தயம் கட்டிய பயலுகளே
எங்க இருக்கிறியள் இப்ப
மேல தெரியும்
பூரண நிலவுக்கு
புதினங்களை சொல்லிவிடுங்கள்
அந்தப் பாதித்தேங்காய்
பத்திரமாய் உள்ளதென!

No comments:
Post a Comment