Sunday, January 12, 2020

இனியொரு ஊழியும் நோவாவின் பேழையும்!-பொன்.காந்தன்,



கொஞ்சம் முத்தங்கள்
கொஞ்ச ஸ்பரிசங்கள்
கொஞ்ச கவிதைகள் இல்லாத
வெறும் இரவும் படைக்கப்பட்டதா
மறுமறுபடியும்
அவள் வரவுக்காய் காத்திருந்து
எதுவும் பேசாமல்
இரவெல்லாம்
கனவில் சல்லாபிக்கும்
இதயங்கள் இறந்து வெகுநாளாயிற்றா
ரோமியோ யூலியட்
அம்பிகாவதி அமராவதி
தாஜ்மகால்
நேற்று ஓடிப்போய்
குளத்தடிக் கல்லுக்கு முன்
மஞ்சள் நாண் கட்டிக்கொண்டவர்கள்
எல்லா ஆண் பெண் சிலிர்ப்பும்
எங்கேயோ தொலையத் தொடங்கினவோ
என் முதல் காதலின் நினைவுகளை
ஏன்
இன்றும் ஏதோ கணத்திலும்
இதய ஓரத்தில்
இறக்கிவிடாமல் காவித்திரிகிறேன்
யாருமற்ற சாலையின்
அபூர்வ சங்கீதத்தை
தனித்த கன்னியின் ஓலத்தால்
நிரப்பியதும் ஏன்
கற்களை கண்டதும்
எழும்பும் ஆண்குறிகளுக்காய்
என்ன படைக்கப்பட்டது
மலரை தொடும் விரல்களை
நோவாவின் பேழைக்குள்
திரும்பிப் போய் தேடிப்பார்க்கிறேன்
எல்லா கேள்விகளுடனும்
இனியொரு ஊழியின் போது
நோவாவின் பேழைக்குள்
ஒரு துப்பாக்கி
என் கவுண்டர் வார்த்தையும் கூட
எடுத்து வைக்கப்படுவதை
கையாலாகாத படைப்பாய்
பார்த்துக்கொண்டிருப்பேனா


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...