கிணறுப்புட்டிக்கு மேல் ஏறி
விடப்படும் காற்றாடியை கடந்தும்
நூலறுந்து
தொலைவில் விழுந்தழைப்பதாய்
உயரப்பிடித்த பதாகையில்
எழுதப்பட்டுவிட்டது கூப்பிடு தூரக்குரல்
வாலறுந்த தும்பி
காவிவருவதற்கான காத்திருப்பில்
நினைவழியா கோலத்துடன் முற்றங்கள்
விடப்படும் காற்றாடியை கடந்தும்
நூலறுந்து
தொலைவில் விழுந்தழைப்பதாய்
உயரப்பிடித்த பதாகையில்
எழுதப்பட்டுவிட்டது கூப்பிடு தூரக்குரல்
வாலறுந்த தும்பி
காவிவருவதற்கான காத்திருப்பில்
நினைவழியா கோலத்துடன் முற்றங்கள்
கூப்பிடு தூரத்தில் இல்லாக் குரல்
தொண்டைக்குள் தளதளக்கிறது
கூப்பிடு தூரத்தில்
இரக்கமுள்ளவர்களும் இருப்பதாயில்லை
அருகிலும் சுற்றியும்
ஆளரவமற்ற தெரு
இடிபாடுகள் இரசிக்கும்
உல்லாசப்பயணிகளால் நிரம்பிவிட்டது
தொண்டைக்குள் தளதளக்கிறது
கூப்பிடு தூரத்தில்
இரக்கமுள்ளவர்களும் இருப்பதாயில்லை
அருகிலும் சுற்றியும்
ஆளரவமற்ற தெரு
இடிபாடுகள் இரசிக்கும்
உல்லாசப்பயணிகளால் நிரம்பிவிட்டது
வீட்டு சுவர்களில் பட்டுத் திரும்பிய
எதிரொலியில்
சிலிர்த்த மழலையின் புன்னகை
குயில்களோடு சேர்ந்து கூவிய குரல்கள்
கனவுகளில் புலம்பி
வெட்கப்பட்ட மௌனங்கள்
தாதியின் ஊசியை கண்ட
சிணுக்கம்
கல்லிடித்தபோது பிறந்த ஐயோ
பருவக்கோளாறில்
திரும்ப திரும்ப முணுமுணுத்தவை
கூப்பிடு தூரக்குரலின் இழை அறுந்து
ஓங்கிப் புலம்ப வைத்திற்று
ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பெயருடன்
எதிரொலியில்
சிலிர்த்த மழலையின் புன்னகை
குயில்களோடு சேர்ந்து கூவிய குரல்கள்
கனவுகளில் புலம்பி
வெட்கப்பட்ட மௌனங்கள்
தாதியின் ஊசியை கண்ட
சிணுக்கம்
கல்லிடித்தபோது பிறந்த ஐயோ
பருவக்கோளாறில்
திரும்ப திரும்ப முணுமுணுத்தவை
கூப்பிடு தூரக்குரலின் இழை அறுந்து
ஓங்கிப் புலம்ப வைத்திற்று
ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பெயருடன்
உக்கி விழுந்த
மாமர ஊஞ்சலில்
கனவு திரித்துள்ள தூக்குக்கயிற்றில்
சிக்காமல்
மிருகங்களுக்காகவே வளரும் காட்டில்
இரக்கமற்றவை வாழ்கின்றன
குரல்களுக்குப் பதிலாய்
பதாகைகளுக்குப் பதிலாய்
ஆர்ப்பாட்டக்காரரருக்கும்
வேறு ஒன்று தேவைப்படக்கூடும்
மாமர ஊஞ்சலில்
கனவு திரித்துள்ள தூக்குக்கயிற்றில்
சிக்காமல்
மிருகங்களுக்காகவே வளரும் காட்டில்
இரக்கமற்றவை வாழ்கின்றன
குரல்களுக்குப் பதிலாய்
பதாகைகளுக்குப் பதிலாய்
ஆர்ப்பாட்டக்காரரருக்கும்
வேறு ஒன்று தேவைப்படக்கூடும்

No comments:
Post a Comment