கடைத்தெருவுக்குப்போய் திரும்பும்போது அநேகமாய் மா சீனி பருப்பு கறி புளியோடு பையில் ஓரத்தில் திரைப்பட இறுவட்டுகளும் வந்து சேர்வதும் பழக்கப்பட்டுவிட்டது.எல்லாவற்றையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.அட்டைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு திரைப்படங்களை தீர்மானிக்க முடியவில்லை.அவ்வாறே பரியேறும்பெருமாள் மேற்குத் தொடர்ச்சி மலை கிணறு தொண்ணூற்றாறு..என தொடர்வன ஏராளம் சன்னிலியோனின் வரலாற்றையும் பிடல்கஸ்ரோ சேகுவரா காந்தி கிட்லர் ஓமர்முக்தா உள்ளிட்டவர்களையும் கடைத்தெரு பை காவிவந்திருக்கின்றது.இப்போதும் என் மேசையில் எனது திரைப்பட பிரியரான நண்பர் ஒருவர் தான் எடுத்து பார்த்தவைகளை ஒரு பையில் அள்ளிபோட்டு தந்துவிட்டார்.மேசையில் பரவிவைத்துவிட்டு ஒவ்வொன்றாய் அதன் முகப்பை பார்த்துச்செல்கின்றேன்.மிடில்கிளாஸ் ஆம்பிள, நான் லோக்கல், சர்வம் தாளமயம், பொதுநலன்கருதி, சமுத்திரபுத்திரன், நிஞ்ஜா, சர்க்கார், பேட்டை, மாரி2, சண்டைக்கோழி2, Chinese Peace Keeping Forces,Immortals,The God Father part2,The Cell,Eagle Eye,Private War...
கூட்டுக்குள் இருந்து வந்து ஜோசியக்காரன்முன் கிளி சீட்டை எடுப்பதுபோல என் கை என்னவோ தெரியவில்லை Private War
இறுவட்டை எடுத்துவிட்டது.ஒரு பழக்கப்பட்ட முகம் அதன் அட்டையில் இருப்பது போல இருந்தது.மிகவும் ஆவலோடு அதை கணணியில் செருகி இயக்கினேன்.ஆம் நிச்சயம் அது பழக்கபட்ட முகம்தான் மேரிகொல்வினின் ஊடக வரலாற்றை சொல்லும் படம்தான்.அதை பார்ப்பதற்கு முன்னமே அதைபற்றிய ஒரு பெருமிதம் இருந்தது.போருக்குள்ளேயே வாழ்ந்து முடித்த ஒரு ஊடக சரித்திர நாயகியின் கணங்களை மிக தத்ரூபமாக அத்திரைப்படம் பதிவு செய்கின்றது.ஆரம்பத்திலேயே வன்னியில் மேரி கொல்வின் போர்க்காலத்தில் நின்ற காட்சியும் அவர் எறிகணை வீச்சில் சிக்குண்டு தனது ஒரு கண்ணை இழப்பதும் என்பதில் இருந்து அத்திரைபடம் நகர்கின்றது.வன்னிக்காட்சியில் விடுதலைப்புலிகள் வரிச்சீருடையுடன் தோன்றுகின்றனர்.அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பாத்திரம் மேரிகொல்வினோடு உரையாடுவது காட்சியாக்கப்பட்டுள்ளது.அவ்வாறே காஸா லிபியா பாக்தாத் சிரியா என்று மேரிகொல்வினின் போருக்குள் வாழ்ந்த ஊடகப்பயணத்தை அத்திரைப்படம் மனதில் ஈரம்வழிய நிறைக்கின்றது.
இந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தருணத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சிரியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர் இன்னும் ஓரிரண்டு நாட்களுக்குள் முற்றுப்பெற்றுவிடும் என்றும் ஐஎஸ்ஐஎஸ் தரப்பு அழிக்கபட்டு போர்முடிவுக்கு வந்துவிடும் என ஊடகமொன்றில் செய்தி பார்த்தேன்.இறுதி நகரில் போர் நடந்துகொண்டிருக்கின்றது என்று சொல்லப்பட்டது.இறுதி நகரின் போர் எனும்போது நெஞ்சு ஏனோ படபடக்கின்றது.

உண்மையில் அந்த இறுதிக்கட்ட போர் இறுதி நகரப்போர் என்ற வார்த்தைகளுக்குள் அங்கு எவரெல்லாம் கொல்லப்படுகின்றார்கள். எப்பிடி எமது முள்ளிவாய்க்கால் இறுதி நகருக்குள் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் வயோதிபர்களும் எறிகணை மழைகளால் சிறீலங்கா படைகளால் பயங்கரவாத்தை அழிக்கின்றோம் என உலகத்திற்கு அறிவிக்கப்பட்டு கொல்லப்பட்டார்களோ அவ்வாறே சிரியாவின் இறுதிக்கட்ட போரும் என மனம் தவிக்கின்றது.எம்மை கொன்றுமுடிக்கும்வரை இறுதிக்கட்டபோர் இறுதி நகரம் மனிதாபிமானத்துக்கான போர் பயங்கரவாத்தை அழித்தல் என்ற வாசகங்களுக்கு பின்னால் இருந்து மகிந்த அரசாங்கம் விடுத்த அத்தனை அறிக்கைகளையும் இந்த உலகத்தில் இன்று மனிதாபிமானம் மனித உரிமை என பேசிக்கொண்டிருக்கின்ற அத்தனை நாடுகளும் ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தன.நாம் இறுதி நகரில் செத்துக்கொண்டிருந்தோம் எமது குழந்தைகள் இரத்தத்தில் மிதந்து கொண்டிருந்தன.
ஊடகவியலாளர் மேரிகொல்வின் 2012ல் சிரியாவில் கொல்லப்பட்ட தருணத்தில் இருந்து அங்கு சுமார் 5 இலட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.நிச்சயமாக ஐந்து இலட்சமும் ஐஎஸ்ஐஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல ஏதுமறியாத சிரியகுழந்தைகளும் அப்பாவி சிரியபெண்களும் வயோதிபர்களும். எனக்கு சிரிய குழந்தையின் இரத்தத்துக்கும் முள்ளிவாய்க்கால் குழந்தையின் இரதத்துக்கும் வேறுபாடு காணத்தெரியவில்லை என்னையறியாமலே நெஞ்ச பதறுகின்றது.ஒவ்வொரு போரின் முடிவிலும் சொல்லப்படுகின்ற இறுதி நகரம் என்ற வார்த்தை இறுதி நரகம் என்றே சொல்லத்தோன்றுகின்றது. என்னை இப்படி Private War சிலவிடயங்களை எழுதவைக்கின்றது.எமது குரல் எமக்கானது மட்டுமல்ல எமது குரல் அவர்களுக்கானதும்.உலகின் கண்களில் இருந்து மறைக்கப்படும் இறுதி நகரப்போர்களில் நிச்சயம் மனிதப்பேரவலம் நிறைந்திருக்கும்.

No comments:
Post a Comment