இதை சித்திரையில் என்று தொடங்கவில்லை.ஏப்ரலில் என்று தொடங்குகின்றேன்.ஏனெனில் என்னுடைய ஏப்ரலோடு ருஸ்யாவும் அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவும் பாகிஸ்த்தானும் என இந்தப்பூமிப்பந்தின் அநேகநாடுகள் பிணைந்திருக்கின்றன.நான் சித்திரையோடு மட்டும் இருக்கும்போது இளையராஜாவின் ஏப்பிரல் மேயிலே பசுமையே இல்லை காய்ஞ்சு போச்சுடா இந்த ஊரும்பிடிக்கலை உலகம் பிடிக்கல என்ற பிடித்தமான பாடலை பாடும்போது கோடையெனினும் இதமாக இருக்கும் அப்படியொரு சித்திரைகள் என்னை விட்டுப்போய் நெடுங்காலமாகிவிட்டன.என்னுடைய ஏப்பிரல் என்று தொடங்கும்போது நான் ஒரு பூச்செண்டோடு இந்த பூமியை வரவேற்க முடியாதவனாய் இருக்கின்றேன்.ஏப்பிரலை எழுதச்சொன்னால் மொத்த வர்ணங்களிலும் என் கை செக்கச்சிவந்த சிவப்பு வர்ணத்தையே கையிலெடுத்துக்கொள்கிறது. ஒரு செக்கச்சிவந்த சிவப்பு வர்ணத்தை எடுத்த இந்த ஏப்பிரலின் ஈழ ஓவியனை ஒரு அழகிய ரோஜா மலரை வரைந்து அதை காதலிக்கு பரிசாக கொடுக்க முடியாதபடியும்.செவ்விரத்தைகளையும் ஒரு வசந்த காலத்தில் தெருக்களில் பூத்திருக்கும் முள்முருக்கம் பூக்களையும் வரையமுடியாதபடியும் வானவில்லை வளைக்கமுடியாதபடியும் இந்த பூமி படைத்திருக்கின்றது.நிச்சயம் ஏப்பிரல் முட்டாள் நானா பூமியா!
நேசம் மிக்க உலகீரே!உலகீரே!! உங்கள் மேனி எலுமிச்சை பழம்போன்ற மஞ்சளாகவும் கருகருவென உரப்பாகவும் கறுப்பாகவும் செம்படையாகவும் உங்கள் அகன்ற உதடுகளில் வழியும் புன்னகையாகவும் சிறிய உதடுகளில் தவளும் பாசையாகவும் இருக்கலாம்.உங்கள் கண்கள் நீல மலர்கள் போலவும் காட்டின் இலந்தைப்பழங்கள் போலவும் இருக்கலாம்.உங்களது நிறமற்ற கண்ணீர் என்னிடமும் உண்டு.உங்களது சிவந்த குருதி என் உடலிலும் பாய்கின்றது.நான் தமிழில் கவிதை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.ஒரு விடுமுறையில் மலைகளை கடந்தும் பரந்த வயல்களை கடந்தும் அகன்ற சோழக்காடுகளை காடுகளை கடந்தும் நீர் வீழ்ச்சிகளையும் கோதுமை நிலங்களையும் கடந்து செல்லும் ஒரு நீண்ட இரயில் பயணத்தின் அனுபவங்களை சுமந்தும்.ஊரை விட்டுப்போய் பயணத்தின் இடையில் நெருப்பினை மூட்டி காட்டுப்புறத்தில் உங்கள் மூதாதையரின் தாளங்களையும் பாடல்களையும் இசைத்து மகிழ்ந்து இரவு உணவை சுவைக்கும் இன்பத்தை அனுபவித்தும் இருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் ஏப்ரல்களைப்போல என்னுடைய ஏப்ரல் இல்லை.மன்னித்துக்கொள்ளுங்கள் பூமியின் காதலர்களே உங்கள் இன்ப முத்தச்சத்தங்களுக்கு இடையில் என் இரத்த சாட்சியப்பாடலை பாடப்போகின்றேன்.மங்கிய இரவு ஒளியில் மதுக்குவளைகள் ஏந்தி இங்கிதத்துடன் குவளைகள் உரசி இடைபற்றி நடனமாட தயாராகும் நண்பர்களே நானும் ஒரு குவளையை ஏந்தியிருக்கின்றேன்.அதில் ஈழக்குழந்தையின் குருதி நிம்பியிருக்கின்றது.தயவு செய்து இப்போதேனும் ஏன் என்று கேளுங்கள் என்னிடம் ஒரு கதையுண்டு.அதன் பெயர் என்னுடைய ஏப்பிரல்.
நான் ஒரு ஈழத்தவன்.ஈழம் என்பது தமிழனின் பூர்வீக நிலம்.குன்றுகளாலும் வயல்களாலும் மனதுக்கு இனிய நதிளாலும் கானகங்களாலும் கடலாலும் ஆன அழகிய நிலம்.நிலத்தை இழக்கச்சம்மதிக்காத உங்களுடைய இதயத்தைப்போன்றதே என்னுடையதும்.என்னுடைய நிலத்தின் ஒரு குக்கிராமத்தில் துரத்தப்பட்ட எனது கதை தீராவலியுடையது.ஆக்கிரமிப்பாளன் என்னை துரத்தும்போது பூக்களாலும் பூவின் இனிய பாடல்களாலும் நிரம்பியிருந்த என்னுடைய ஊரை அப்படியே வாரி அணைத்து சுமந்து செல்ல வேண்டுமென எனக்கு ஆயிரம் கைகளை அதிசயம் நிகழ்த்திய கடவுளரிடம் கேட்டேன்.சிறுவன் லிடியனின் பிரியமான பியானோவைப்போல என்னுடைய ஊர்ச்சிறுவன் சிறிய விளையாட்டுப் பியானோவை அணைத்தபடி தாயின் மார்பில் உறங்கியபடியே தனது இனிய மண்ணளையும் முற்றத்தை இழந்து போய்கொண்டிருந்தான்.அந்தப்பயணத்தில் ஒரு பொழுதில் பியானோ தனித்துவிட்டதை கண்டேன்.அதன்மீது குருதி படிந்திருந்திருந்தது.அதன் பாடல் என்னை உலுப்பிப்போட்டுவிட்டது.வானம் முழுதும் குண்டுவீச்சு விமானங்ளால் நிறைந்திருந்தது.காற்று சன்னங்களின் ஓசைகளால் நிறைந்திருந்தது.எப்போதும் மரங்களோ ஆடைகளோ ஊர்திகளோ பிணங்களோ கருகிய மணம் என்னைச்சுற்றியிருந்தது.ஆயிரக்கணக்கில் எறிகணைகள் வீழ்ந்து சிதறி இரும்புத்துண்டுகளால் தெருக்களும் வயல்களும் நிரம்பியிருந்தன.என்னுடைய ஆடைகள் போகபோக குறைந்துகொண்டே சென்றன.ஓரிடத்தில் குண்டுகளில் காயப்பட்டவர்களுக்கு கட்டுப்போடவும் தெருவில் வீழ்ந்த கிடந்த பிணங்களான மனிதர்களை மூடவும் எனது ஆடைகள் இழக்கப்பட்டன.குருதிக்கறையுடன் ஓரிரு ஆடைகளுடன் ஓடிக்கொண்டிருந்தேன்.பிறகு வீழந்து கிடந்த பிணங்களை மூட அருகில் இருந்த மரங்களின் கிளைகளை முறித்து இலைகளால் மூடினேன்.இதையேதான் மரணப்போரில் தப்பித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு மனிதர்களும் செய்து கொண்டிருந்தார்கள்.இந்த மரணப்போரை யார் செய்து கொண்டிருந்தார்கள் ஏப்ரலை யாரெல்லாம் உலகில் உச்சரிக்கிறார்களோ அவர்களெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள்.உலக நாட்காட்டியில் ஏப்பிரலில் நான் இரக்கமுடைய திகதியை தேடிப்பார்கின்றேன் இல்லை.இந்த உலகத்தின் இரக்கமற்ற ஏப்ரலின் நாளொன்றில் நான் பிணங்கள் ஆயிமாயிரம் கடந்த ஓட்டத்தின்பின்பு இரட்டைவாய்க்கால் சந்தியில் குந்தியிருக்கின்றேன்.
இரட்டை வாய்க்கால் என்பது முள்ளிவாய்க்காலுக்கு போகும்வழியில் உள்ள ஒரு சந்தி.இப்போது அந்த இரட்டை வாய்க்கால் தெருவூடாக பயணித்துப்பாருங்கள் என்னை போன்ற ஒரு போரின் கதை சொல்லி மரணத்தின் ஒப்பாரி சொல்லி அருகே வந்தாகவேண்டும்.இல்லையெனில் நீங்கள் அதை ஒரு சொர்க்கபூமி என எழுதி விடுவீர்கள் உங்கள் நாட்குறிப்புக்களில்.இப்பொழுது ஒரு அந்திபொழுதில் இரட்டை வாய்க்கால் சந்திக்கு அருகில் உள்ள நீரோடையில் வீச்சுவலையில் மீன்பிடித்துக்கொண்டு இருப்பார்கள்.மாலை நேரங்களில் இப்போது ஒரு கூட்டம் அவ்விடத்தில் மீன்பெட்டிகளோடு நிற்கும்.அந்த நீரோடை நந்திக்கடலோடு தொடுக்கின்றது.இரட்டை வாய்க்கால் சந்தியில் இருந்து தெற்கே பார்த்தால் நீண்ட வயல்கள் இப்போது.வயல்கள் விதைப்பு அற்ற பொழுதுகளில் எருமைகளும் மாடுகளும் அடர்ந்திருக்கும்.அப்பால் பற்றைக்காடுகள் ஊடே நந்திகடல் தெரியும்.அந்த நந்திக்கடல் நீண்டு சென்று வட்டுவாகல் ஊடாக முல்லைபெருங்கடலோடு இணைகின்றது.இப்போது இரட்டை வாய்க்காலில் வயல்களும் பசுமையும் ஆநிரைகளும்.அதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு முன் பெருந்தொகையான வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன.அத்தனையும் முள்ளிவாய்க்கால் போரில் எனது சனங்கள் இழந்த வாகனங்கள்.எனது சனத்திற்கு ஒரு உழவு ஊர்தி தெய்வம் போன்றது.அது வீட்டில் நிற்பது செல்வம் என்பார்கள்.அப்படித்தான் பேரூந்துகள்.உந்துருளிகள்.பல உந்துருளிகள் உண்மையில் தனது மண்விடுதலை என்ற ஒரே இலட்சியத்தை வரித்துக்கொண்ட உண்மையான எளிமையான போராளிகள் ஓடியவை.அந்த உந்துருளிகளில் சென்று விடுதலை பற்றிய வாசகங்களை மக்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள்.அந்த வாகனக்குவியலுக்குள் புரண்டும் கவின்றும் கிடந்த ஈருருளிகளின் கதை பெரியது.அவைதான் எமது மக்களின் தேசியவாகனம்.அரசாங்கம் பொருளாதாரதடை விதித்து எரிபொருட்கள் வராத காலத்தில் இந்த ஈருருளிகள்தான் எனது சனத்துக்கு எல்லாமும்.மலையென இரட்டை வாய்க்காலில் குவிக்கப்பட்டிருந்த அந்த ஊர்திகள் அனைத்தும் எனது சனத்தின் வியர்வையால் ஆனவை.எனது சனத்தின் உழைப்பின் அடையாளம் அவை.அவை பிறகு மௌ;ள மௌ;ள காணாமல் போயின எவ்வாறு ஆக்கிரமிப்பாளன் உயிர்களை கொத்துக்கொத்தாய் கொன்றொழித்தார்களோ அவ்வாறே கொத்துக்கொத்தாய் எனது சனத்தின் சொத்துக்களையும் இரும்பு விலைக்கு விற்று காசாக்கினார்கள்.
ஊர்திகள் குவிக்கப்பட்டிருந்த இரட்டை வாய்க்காலுக்கு முன்னான நான் ஏப்பிரல் மாதத்தில் அந்த இடத்தில் நந்திக்கடல் திசையில் ஒரு பதுங்கு அகழியில் குந்தியிருந்தேன்.ஈழத்தின் இறுதிப்போர் உக்கிரம்பெற்ற பொழுதுகள் அவை.புதுக்குடியிருப்பு திசையில் மிக நெருக்கமாக உலங்குவானூர்திகள் எழுந்து எனது திசையில் குண்டுகளை பொழிந்துகொண்டிருந்தன.மிக் கிபிர் விமானங்கள் தொடர்ந்து தாழப் பறந்து குண்டுகளை கொட்டிக்கொண்டிருந்தன.சன்னங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.கொத்துக்குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்தன.அது ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் சில வேளை ஆயிரத்தை அண்டியும் மக்கள் சாவைத்தழுவிய நாட்கள் அவை.கொல்லப்பட்டவர்களை விட்டுவிட்டு அப்பால் சொந்தபந்தங்கள் ஓடிக்கொண்டிருந்த தருணம்.அந்தந்த இடத்திலேயே அவசரஅவசரமாய் குவியல் குவியலாய் எனது சனங்கள் புதைக்கப்பட்டன.எல்லோருடைய முகங்களிலும் கண்ணீர் இருந்தன.எல்லோர் முகங்களும் தூக்கமின்றி மரண பயத்தில் வெளிறியிருந்தன.நல்ல தண்ணீர் இல்லை.மலம் கழிக்கவோ சலம் விடவோ பதுங்குழிக்கு வெளியே போகமுடியவில்லை.உணவு சமைக்கமுடியவில்லை.பிணங்கள் தெருக்களிலேயே கிடந்து அழுகத்தொடங்கியது.இறுதிக்கிரியைகளோ சவப்பெட்டிகளோ இல்லை.எவர் உயிரோடு இருக்கின்றார் எவர் உயிரோடு இல்லை என்பதை அறிய முடியவில்லை.போர் இன்னும் உக்கிரம் அடைகின்றது.அது ஏப்பிரலின் ஒரு இரவுப்பொழுது
மழை கொட்டத் தொடங்குகின்றது.மழை கொட்டத்தொடங்கியதும்.எனது சனத்தின் அவலம் சொல்ல வார்த்தைகள் இல்லை.தங்கள் உயிர்களை காக்க கடைசி அத்தியாயமாயிருந்த பதுங்குழிகளுக்குள் நீர் நிரம்பத்தொடங்கியது.இரட்டை வாய்க்கால் பகுதி நீர் பாயும் நிலம்.வெள்ளம் பாயத்தொடங்கியது.வெள்ளம் நிரம்பி தொண்டை அளவில் பதுங்குகுழிக்குள் நீர் நிரம்பியபோதும் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சன்னம் படாதிருக்கவும் மழை படாதிருக்கவும் மார்போது அணைத்தபடி குளிரில் விறைத்துக்கொண்டிருந்த ஏப்பிரலின் கொடிய இரவு அது.இயற்கையும் எமது சனத்தின் மரணத்துக்கு துணைபோன துரோக இரவு அது.நள்ளிரவு அண்டிய நேரம் புதுக்குடியிருப்பு திசைகளில் இருந்து ஆயிரக்கணக்கில் எறிகணைகள் பாய்ந்தன எங்கள் திசையில். அது கொடிய இரவு.நான் பதுங்குகுழிக்கு வெளியில் அருகில் ஒரு பேரூந்தின் அருகே குந்தி இருந்தேன்.வானம் தீம்பிழம்புளால் நிறைந்திருந்தது.வானில் எல்லா நட்சத்திரங்களும் வெடித்து சிதறுவதுபோல இருந்தது.மழை இரவில் அதிர்ந்துகொண்டிருந்தது நிலம்.சாவின் ஓலம் எங்கும் கேட்டுக்கொண்டிருந்தன.நிச்சயம் அது ஒரு பெரிய மரண இரவு.பல குடும்பங்களின் கதை காய் பூ பிஞ்சு செடியோடு அடியோடு முடிந்த கதையின் இரவு அது.

மரண இரவு விடிந்தது.
வேவு விமானங்கள் விடியவிடிய சுற்றிக்கொண்டிருந்தன.நான் எனது பற்றையின் கீழிருந்த பதுங்குகுழியில் நிரம்பியிருந்த நீரை ஒரு சிறிய கிண்ணத்தால் அகற்றிக்கொண்டிருந்தேன்.காலை ஒரு ஆறுமணி இருக்கும்.எனது பதுங்குகுழிக்கு அருகாக ஒரு தாயும் ஒரு மழலையும் அருகில் உள்ள ஓடையை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள்.காலைக்கடன் கழிக்கவாக இருக்கலாம்.மரணஇரவில் உயிர்பிழைத்தவர்களின் நானும் அவர்களும் கூட.அவர்கள் என்னை கடக்கவும் நான் குனிந்து நீர் அள்ளவும் என ஒரு கணத்தில் ஒரு எறிகணை அந்த இளம் தாயின் காலடியில் வீழ்ந்தது.சற்று நேரத்தில் சுற்றியும் புகைமண்டலம்.அது அடங்கிய கணத்தில் தாயின் ஒரு கருகிய பிணக்கட்டை கிடந்தது.குழந்தையை காணவில்லை.குழந்தையின் சட்டை எனது பதுங்குகுழிக்கு மேல் பற்றையின் கிளைகளில் சதைத்துண்டங்களோடு தொங்கிக்கொண்டிருந்தது.அதன் பிறகு நான் ஈழத்தின் நடைப்பிணமென்பதை உணரத்தொடங்கினேன்.நடந்துகொண்டிருக்கின்றேன்.என்னுடைய ஒரு குழந்தையை கொன்ற கொடுரமான பூமியால் ஆனது எனது ஏப்பிரல்!

No comments:
Post a Comment