அடித்து துவைத்து
அம்மா காயப்போட்ட பின்னர்தான்
பகீர் என்றிருந்தது நெஞ்சு
காற்சட்டை பையில்
உன் கடிதம் இருந்தது
இன்னமும்
அப்படியே இருக்கிறது
அந்தப் படபடப்பு
அம்மா காயப்போட்ட பின்னர்தான்
பகீர் என்றிருந்தது நெஞ்சு
காற்சட்டை பையில்
உன் கடிதம் இருந்தது
இன்னமும்
அப்படியே இருக்கிறது
அந்தப் படபடப்பு
வாட்ஸப் வைபர்
எதுவுமில்லாக்காலத்தில்
உன்
முத்து முத்துக் கையெழுத்தில்
மூழ்கியிருந்தன என் இரவுகள்
எதுவுமில்லாக்காலத்தில்
உன்
முத்து முத்துக் கையெழுத்தில்
மூழ்கியிருந்தன என் இரவுகள்
அந்த நாட்களில் ஒரு நாள்
உன்னிடமிருந்து
இன்னொரு கடிதம் என் கைக்கு வந்தது
மறைவாய் அதை பிரித்தபோது
அது கடிதம் அல்ல
கவிதை
உன்னிடமிருந்து
இன்னொரு கடிதம் என் கைக்கு வந்தது
மறைவாய் அதை பிரித்தபோது
அது கடிதம் அல்ல
கவிதை
பத்திரிகையில்
வந்ததை
கத்தரித்து அனுப்பியிருந்தாய்
அதில் இவ்வாறு இருந்தது
கத்தரித்து அனுப்பியிருந்தாய்
அதில் இவ்வாறு இருந்தது
அவள் என் தாடியை வழிக்கச் சொன்னாள்
வழித்தேன்
அவள் என் மீசையை கத்தரிக்கச்சொன்னாள்
கத்தரித்தேன்
முடியிலும் சில மாற்றங்கள் சொன்னாள்
மாற்றினேன்
சில நண்பர்களையும் விடச்சொன்னாள்
கைவிட்டேன்
அவள் மண்ணையும் மறக்கச் சொன்னாள்
அவளை நான் மறந்துவிட்டேன்!
வழித்தேன்
அவள் என் மீசையை கத்தரிக்கச்சொன்னாள்
கத்தரித்தேன்
முடியிலும் சில மாற்றங்கள் சொன்னாள்
மாற்றினேன்
சில நண்பர்களையும் விடச்சொன்னாள்
கைவிட்டேன்
அவள் மண்ணையும் மறக்கச் சொன்னாள்
அவளை நான் மறந்துவிட்டேன்!
No comments:
Post a Comment