எங்கயோ ஏமலாந்தி
இடம்வலம் தெரியாமல்
தடுமாறி தளம்பி வந்து
வண்டியில் இடித்து
வாய்க்காலில் போய்விழுந்து
முண்டி எழுந்து
ஒண்டும் தெரியாதவர்போல்
நொண்டி நடந்து போய்
நோவெண்ணை போட்டுருவும்
சந்தி வளைவுகளில்
சாதாரணமாய் நடக்கும்
சமாச்சாரம் காலம் போய்
இடம்வலம் தெரியாமல்
தடுமாறி தளம்பி வந்து
வண்டியில் இடித்து
வாய்க்காலில் போய்விழுந்து
முண்டி எழுந்து
ஒண்டும் தெரியாதவர்போல்
நொண்டி நடந்து போய்
நோவெண்ணை போட்டுருவும்
சந்தி வளைவுகளில்
சாதாரணமாய் நடக்கும்
சமாச்சாரம் காலம் போய்
சிண்டு சிணுக்கத்துடன்
செல்போனை முனகி வந்து
நிண்டு கதைக்காமல்
நேராய் சில்லுள்விட
கல்லுக்குள் போய்விழுந்தேன்
கடவாயில் ஒரு கீறல்
பல்லுக்குள் ஆடல்
சொல்லுக்குள் இருந்து
ஒரு 'சொறி'யை எடுத்துவிட்டு
வண்டோடு செல்போனில்
வாயை நெளித்துக் கடந்தாள்
இன்றோடு நாள் எட்டு
இன்னும் இடுப்பில்வலி
கொடுப்பில் ஒரு முறுக்கை
கொறிக்க முடியவில்லை
சண்டாளி!
செல்போனை முனகி வந்து
நிண்டு கதைக்காமல்
நேராய் சில்லுள்விட
கல்லுக்குள் போய்விழுந்தேன்
கடவாயில் ஒரு கீறல்
பல்லுக்குள் ஆடல்
சொல்லுக்குள் இருந்து
ஒரு 'சொறி'யை எடுத்துவிட்டு
வண்டோடு செல்போனில்
வாயை நெளித்துக் கடந்தாள்
இன்றோடு நாள் எட்டு
இன்னும் இடுப்பில்வலி
கொடுப்பில் ஒரு முறுக்கை
கொறிக்க முடியவில்லை
சண்டாளி!
முந்தி மழைப்பொழுதில்
மிதிப்பை அதிகரிக்க
குந்தி இருந்த சீற்றிருந்து
கொஞ்சம் எழுந்து நின்று
எழும்பி உழக்கியுழக்கி
ஏற்றத்தில் கடக்கையிலே
ஐயகோ பெடல் வழுக்கி
அடியிலே அதிரும்படி
விழுந்த அடியைவிட
இது ஒன்றும் பெரிதில்லை
மிதிப்பை அதிகரிக்க
குந்தி இருந்த சீற்றிருந்து
கொஞ்சம் எழுந்து நின்று
எழும்பி உழக்கியுழக்கி
ஏற்றத்தில் கடக்கையிலே
ஐயகோ பெடல் வழுக்கி
அடியிலே அதிரும்படி
விழுந்த அடியைவிட
இது ஒன்றும் பெரிதில்லை
நிண்டு பார்த்து
கொண்டுபோவமோ
கொஸ்பிட்டலுக்கென்று
ஒரு பண்புக்காவது கதைத்து
என்ன செய்யுது என்று
ஏழெட்டுத்தரம் கேட்டு
சமாளித்துப்போயிருந்தால்
சரி என்று மனம் ஆறும்
அது கிடக்கட்டுமென
அகன்றுபோனால்
ஆத்திரம் வராதோ சொல்லும்!
கொண்டுபோவமோ
கொஸ்பிட்டலுக்கென்று
ஒரு பண்புக்காவது கதைத்து
என்ன செய்யுது என்று
ஏழெட்டுத்தரம் கேட்டு
சமாளித்துப்போயிருந்தால்
சரி என்று மனம் ஆறும்
அது கிடக்கட்டுமென
அகன்றுபோனால்
ஆத்திரம் வராதோ சொல்லும்!
No comments:
Post a Comment