நகரத்தின் நெரிசல் மிக்க காலை பேரூந்தில் ஏறி அமர்ந்திருக்கின்றேன்.அத்தர் பன்னீரும் மலர்களின் நறுமணம் வீசும் ஆண்டவனின் மூலஸ்த்தானம் போல அந்த பேரூந்து என்னை தன் இருக்கையில் அமர்த்தி அத்தனை நாடிகளை பற்றிப்பிடித்திழுக்கும் மாயத்தில் தோன்றுகின்றது.சாம்பூக்களில் நனைந்து காய்ந்தும் காயாமல் கன்னத்தில் துளிர்த்திருக்கும் குளியலின் எச்சத்தோடு காற்றில் பறந்து என் கண்கள் மீதும் பரவிச் சரியும் கன்னியரின் கூந்தலில் என்னை இழந்துவிடுவேனோ எனும் அச்சம் மேவிய இன்பத்துடன் இருக்கையில் இருந்தபடியே மனத்துப்பட்டியை இறுக்கி இழுத்து கொழுவ முயல்கின்றேன்.
புதிய நாகரிகளின் குதிரையில் ஏறிச்சவாரிவிடும் ஆடைகளில் பொங்கித்தணிந்து திமிறித் தாழ்ந்து அடங்கி வளைந்து ஆணெனும் என் வேரின் தாகத்தின்மீது பிடித்துலுப்பும் பேரூந்துப் பெண்களின் மேனிகளில் மொய்த்துக்கிடக்கும் என்னை எப்படியோ விடுவித்து ஒரு முனிவனாய் தரிப்பிடத்தில் இறங்கிவிடவேண்டும் என மனம் தவித்துக்கிடக்கின்றது.வேகமாய் பனியில் தோய்ந்த மரங்களின் பூக்கள் நிறைந்த சாலையில் சக்கரங்கள் உரசும் சங்கீதமும் காதுகளில் வந்துவிழ துப்பட்டாக்கள் என் கைகளிலும் முகங்களிலும் தோரணம் கட்டிச்செல்கின்றன.
கொள்ளும் பயனொன்றில்லாக்
கொங்கைதனை கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு
அவன்மார்பில் எறிந்தென்
அழலைத் தீர்ப்பேனென..
கொங்கைதனை கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு
அவன்மார்பில் எறிந்தென்
அழலைத் தீர்ப்பேனென..
நினைவில் வந்து என்னை நெருங்கிக்கிடக்கும் கொங்கைகளை சுமந்த பேரூந்தில் ஆண்டாளுக்கு இடமில்லை.என் அருகில் ஏறிவந்தமர்ந்துவிடாதே நாச்சியார்.காலத்தவமொன்றில் கலந்தோடி கரையெற்ற தவிக்கும் ஈழ மங்கைப்பாக்களுக்கு என் மனத்தை விட்டுவிடுக.
அருப்பு ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய' எனல் ஆம் முலை
மழை ஏந்திய குழலாள்
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய' எனல் ஆம் முலை
மழை ஏந்திய குழலாள்
எனும் கம்பன் வர்ணனையை கண்ணை மூடிக்கொண்டு கடந்தேன் ஒரு நாள் நினைவில்லையா இன்று ஏன் மீண்டும் என்மீது இந்த கொடியிடை நர்த்தனம் கொங்கைப்போர் என் மீது.அனலிடை வேகிய ஆழிக்குமரி சடையினை சிரசில் ஏற்றிமுடிந்து ஏற்றிய சபதத்தில் நின்ற கருமை நிற அனிச்சை ஆளநினைத்த என் குலத்தின் அழகிய ஆம்பல் அங்கயற்கன்னி காலிருந்து தலைவரை என் காமம் கலைத்த இனக்கடவுளின் ஓமகுண்டும்;ஓங்காரி.கடலிடை படர்ந்த தாமரை கரைதனை விளக்கிய நிலவு.இடரினை கொய்து ஆழியில் எழுந்த வாகைப்பூ.என் வர்ணணை நீள கடலினையும் தாவி பரவும் இப்பேரூந்து முடிவிலை அந்த தீப்பெருந்தேவியின் தேவகானம்.
இன்று என் மடியிடை வந்து தழுவும் கன்னக்குழிவிழும் புன்னகை உதடுகளின் பூர்வீகத்தை தேடி அலைந்து என்னை தொலைத்து முடிவிடத்தில் தள்ளாடி இறங்கி பிரமைகள் ஆயிரத்தை பிறப்பிக்கும் இந்தக்கன்னிகளின் பின்னழகு துரத்த என்னை மீட்டெடுக்க தவிப்பேனோ.என்னை எட்டி எட்டிப்பிடித்து இங்கேயே இக்கன்னி மாடத்தில் புளுவென நெளியென கடைகளில் பரவிய அழகிய திணிசுகள் அழைப்பதாய் கிளுகிளுவென உரசுகின்றது நா.பார்த்தசாரதி படைத்த கன்னிகள் பூமி
'நிலவைப் பிடித்துச்
சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம்
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி .
தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவழம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்'
சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம்
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி .
தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவழம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்'
ஐயகோ!அவள் கண்கள் காலத்தின் ஆழத்தில் தள்ளி வியர்வை துளி பரவத் துவண்டு மலரும் விரகப்பூவின் வெளியில் அலைந்து புலம்பும் ஆலாபனைகளுக்காய் என்னை அழைக்க அழைக்க ஓடவிளைகின்றேன்.உப்புவெளியில் கண்டல் பூவொன்று என் காதில் உரச வெப்பத்தணிந்த மணல் மேல் சாய்கின்றேன்.எப்பொழுதோ இருந்த காவலரண் ஒன்றின் கரைந்த மண் என் மேனியில் பட குப்பி கட்டிய குமரிகள் என்னை சுற்றி நிறைகின்றனர்.அப்பழுக்கற்ற அந்தகண்களில் புதைத்து வைத்துபூட்டியிருக்கும் இளமைத்தாகங்களை இந்தாரும் இதை ஒரு பெட்டகத்தில் இட்டு ஒரு நாள் திறந்துபாரும் இப்போதல்ல நாம் இருப்போமோ இல்லையோ நிச்சயமற்ற எங்கள் நித்தங்களின் சத்தத்தை சங்கீதமாக்கி ஒரு சதா உலகத்துக்கு கொடும் என்றனர்.
ஈழக்குமரிகளின் இதயத்தை ஏந்த எனக்கு இருகைகள் போதவில்லை.அரியாத்தையிடம் ஆயிரம் கைகள் கேட்டேன்.இன்னும் ஆயிரத்தை குருவிச்சி நாச்சியிடம் கூயியழைத்துப்பெற்றுக்கொண்டேன்.கோப்பாய் வெளிதொடங்கி ஆட்காட்டி வெளிஈறாக கோணமலை முகடுவரை என் ஈழதேவதைகளை தேடவேண்டும்போல இருந்தது.பாடிமுடிக்க முடியாத காவியப்பக்கங்களை பெற்றெடுக்க காலத்திடம் ஒரு பிரசவ அறைகேட்டேன்.பெரிய பனந்தோப்பில் நடந்தபடி இனம்புரியாத காதலை கொட்டித்தந்துவிட்ட ஈழக்குமரிகளின் தாகத்தை வேகத்தை விவேகத்தை வீரியத்தை தியாகத்தை தீட்டிக்கொள்ள ஒரு நிமிர்ந்த புலவனாய் என் மீசையை முறுக்கிக்கொள்கின்றேன்.
பொங்கிய பாற்கடல்
பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
என்கொங்கை கிளர்ந்து
குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும்'
பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
என்கொங்கை கிளர்ந்து
குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும்'
இருக்கட்டும் அங்கேயே நிற்க ஆண்டாள்!என்னோடு அங்கயற்கன்னி மாலதி யாழினி இன்னும் பல ஈழ மங்கைகள்!

No comments:
Post a Comment