பெட்டை குட்டி தாச்சி
பெரிய முலைகள் தொங்க
அவளை கண்டு பலபேர்
ஈன்றால் கடுவன் வேணும்
அல்லும் பகலும் வந்து
பிள்ளை பெறுவை கேட்டு
பெரிய அன்பு தொல்லை
மொட்டை கனகும் வந்து
முன்னம் சொல்லி வைத்தேன்
மூஞ்சை கறுப்பு கொண்ட
தாயின் வடிவில் வந்தால்
கடியன் குட்டி எனக்கு
மனதில் வைக்க வேணும்
மதியம் வந்து குந்தி
மறித்து போகும் அவரை
புறத்தில் போக அழைத்து
கனகு உங்கள் வீட்டில்
நல்ல இனங்கள் இரண்டு
வெள்ளை சடையுடனே
உள்ளதென்று கேள்வி
இன்னும் பிறகெதற்கு
இந்த கடுவன் உமக்கு
என்று கேட்ட போது
ஐயோ அதையேன் கேட்பான்
செல்லம் கொஞ்ச மனிசி
மையல் கொண்டலைந்து
மணி கிராம் பணத்தில்
தையில் வாங்கி வீட்டில்
தரையில் விடாதபடி
தனிய மெத்தை ஒன்றில்
படுக்க விட்டிருக்க
கள்ளன் வந்து அதை
காவி கொண்டு சென்றால்
கண்ணை கசக்கி அவள்
என்னை கவனியாள் பின்
என்ன செய்ய விதி
நாய்கள் காப்பதற்கே
இன்னொரு
நாயை கேட்டேன் இங்கு
என்று கனகு சொல்ல
வாசல் சாக்கில் தூங்கும்
பெட்டை தலை நிமிர்த்தி
தட்டை கழுவி தானும்
மிச்சை எச்சில் சோற்றை
மேன்மையுடன் வைக்கவேனும்
கற்று கொள் நீ
மெத்தையா கேட்டேன்
என்பதாக அப்பார்வை
பெரிய முலைகள் தொங்க
அவளை கண்டு பலபேர்
ஈன்றால் கடுவன் வேணும்
அல்லும் பகலும் வந்து
பிள்ளை பெறுவை கேட்டு
பெரிய அன்பு தொல்லை
மொட்டை கனகும் வந்து
முன்னம் சொல்லி வைத்தேன்
மூஞ்சை கறுப்பு கொண்ட
தாயின் வடிவில் வந்தால்
கடியன் குட்டி எனக்கு
மனதில் வைக்க வேணும்
மதியம் வந்து குந்தி
மறித்து போகும் அவரை
புறத்தில் போக அழைத்து
கனகு உங்கள் வீட்டில்
நல்ல இனங்கள் இரண்டு
வெள்ளை சடையுடனே
உள்ளதென்று கேள்வி
இன்னும் பிறகெதற்கு
இந்த கடுவன் உமக்கு
என்று கேட்ட போது
ஐயோ அதையேன் கேட்பான்
செல்லம் கொஞ்ச மனிசி
மையல் கொண்டலைந்து
மணி கிராம் பணத்தில்
தையில் வாங்கி வீட்டில்
தரையில் விடாதபடி
தனிய மெத்தை ஒன்றில்
படுக்க விட்டிருக்க
கள்ளன் வந்து அதை
காவி கொண்டு சென்றால்
கண்ணை கசக்கி அவள்
என்னை கவனியாள் பின்
என்ன செய்ய விதி
நாய்கள் காப்பதற்கே
இன்னொரு
நாயை கேட்டேன் இங்கு
என்று கனகு சொல்ல
வாசல் சாக்கில் தூங்கும்
பெட்டை தலை நிமிர்த்தி
தட்டை கழுவி தானும்
மிச்சை எச்சில் சோற்றை
மேன்மையுடன் வைக்கவேனும்
கற்று கொள் நீ
மெத்தையா கேட்டேன்
என்பதாக அப்பார்வை
No comments:
Post a Comment