Saturday, January 12, 2019

வட்டு வாகல் வரை-பொன்.காந்தன்

வட்டு வாகல் வரை
அன்று
இரத்தம் சிந்தினோம்
வாட்ஸ்அப்பில்குழுகுழுவாய்
இன்று வந்து குந்தினோம்
முகமாலை சமராடி.
வென்று ஆடினோம்
இன்று வெறும்வாயால் முகநூலில்
தடு மாறினோம்
கல்வியும் சமருமாய்
அன்று விழித்திடலானோம்
இன்று செல்பியும் குமருமாய்
குடித்திடலானோம்
அஞ்சாமல் குடாரப்பில்
தரை இறங்கினோம்
இன்று
கஞ்சாவில் கதி இழந்து
மதி மயங்கினோம்
வெஞ்சமரில் களமாடி
பகை ஒட்டினோம்
இன்று தஞ்சாவூர் பொம்மையென
தலை ஆட்டினோம்
ஆகாய கடல் வெளியை
நாம் திறந்தோம்
இன்று
ஆளறியா ஐடியில்
வாயடித்தோம்
தெம்பு முட்ட படகெடுத்து
போய் வெடித்தோம்
இன்று
அம்பு விட்டு வைபரிலே
வம்படித்தோம்
ஒப்பரேஷன் தவளை கொண்டு
பகை முடித்தான்
இன்று
எப்ப ரேசன் கிடைக்குமென
அணி வகுத்தான்
தொப்பிகல வரையும் ஏறி
போர் தொடுத்தார்
இன்று
பப்பி ஒன்றை மடியில் வைத்து
தடவி கொண்டார்
சப்பு￰￰ சவர் எல்லாம் சுட
களம் புகுந்தார்
இன்று
அப்பு கூட கற்பழிக்க
தினம் எழுந்தார்
மாரியிலும் காவலரண்
காத்து முடித்தார்
இன்று சீரியலை பார்த்து விட்டு
அழுது வடித்தார்
ஒரு தலைவன் பிரபாகரன்
என்றுரைத்தார்
இன்று
ரணில் மகிந்த மைத்திரியாய்
பங்கு பிரித்தார்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...