Saturday, January 12, 2019

குதிரை-பொன்.காந்தன்


பல ஆண்டுகளுக்கு முன்னர்
ஒருநாள்
என் பால்ய வயது 
தோழி வீட்டுக்குப்போனேன்
முதலில் போனதும்
அவள் வீட்டுக் கோடிக்குள் ஓடினேன்
பின்பு
என் குதிரை எங்கே இளவரசி என்றேன்
அவளது கணவரும்
பிள்ளைகளும் ஆச்சரியமும் குழப்பமுமாயினர்
சற்று அமைதியில்
அவளது பதில்
ஒரு சோக கீதத்தின் பின்னணியில்
அறிவித்துச்செல்லப்படும்
அஞ்சலி குறிப்புப்போல வந்தது
இளவரசரே!
ஒரு சூறைக்காற்றில்
உங்கள் குதிரை இறந்து விட்டது என்றாள்
இவ்வாறான ஒரு அழகிய வார்த்தை
முற்றத்திலோ கோடிக்குள்ளோ
நிலத்தில் உரசும்
மரத்தின் வளைந்த கிளைகளில்
ஊஞ்சல் கட்ட எண்ணாத எவரிடமும்
எப்போதும் இருக்கப்போவதில்லை!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...