Wednesday, January 2, 2019

பறவையாதல்-,பொன்.காந்தன்



பறவையாதல் ரொம்ப கடினமென்று
முதலில் புல்லின் நுனிகள் சொல்லிற்று
பறவையாதல் ஒரு வரமென
மரங்களின் கிளைகள் சொல்லிற்று
பறவையாதல் பெருங்கருணையென
முகில்கள் சொல்லிற்று
பறவையாதல் சிறகுகளில் இல்லையென
வானம் சொல்லிற்று
பறவையாதல் பறவைகளுக்குள் இல்லையென
பிரபஞ்சம் சொல்லிற்று
ஒரு பறவை பிறந்திற்று
பறவையானேன் நான்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...