Wednesday, January 2, 2019

பாரதி வீடு-பொன்.காந்தன்

பாதி வழி களைப்புற்று 
பாரதி வீட்டில் நீர் கேட்டு
பருகிட விரும்பி
அழைத்திட்டேன்
வாயிலில் வந்த
அவ்வீட்டார்
வடக்கென கிழக்கென 
விசாரித்து
குவளையில் எட்டி நீர் தந்து
குடித்த பின்
குப்பையிலதை  எறிந்திட்டார்
மீதி வழி பார்த்து
அடியெடுத்தேன்
மின்னலென பெருவெளிச்சம் ஆங்கே
சோதியது  இல்லை
சாதியில் எரிகிறது
அப்பால்  என் தேசத்தை
காண முடியவில்லை
அத்தோடு முடிகிறது....

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...