Wednesday, January 2, 2019

சத்தியா கட் -,பொன்.காந்தன்



சிகை அலங்காரம்  தொடர்பாக கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.முன்னாள் கல்வி பணிப்பாளர் ஒருவர்  அவர் பின்னர்  கல்வி அமைச்சராகவும்  இருந்தார்  அவர் ஓய்வு  பெற்ற பின்பு நான் காண கிடைத்த  விழாக்களில் கொண்டை வளர்த்தபடி  தோன்றினார்.அவர் அந்த கொண்டைக்கு வூல் பாண்ட் போட்டு அழகாக பராமரிப்பதையும் அவதானித்தேன்.பின் அவர் கல்வி அமைச்சராக பின் ஆசை ஆசை யாய் வளர்த்த நாக சடையை  வெட்டி விட்டார்.

ஒரு ஆசிரியராக  இருக்கின்ற  ஒருவர் பாடசாலையில் மாணவர்களை  தம் ஆசிரியத்துவ ஆளுமையால்  நல் வழிப்படுத்த முடியாமல் அதை பாடசாலைக்கு  அப்பால் சென்று ஒரு நிறுவனத்தின் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்து திருத்த வேண்டுமென நினைப்பது  எமது கல்வி சமூகத்தின்  பலவீனதைஅல்லது கையறு நிலையை உணர்த்துகிறது.நாம் படிக்கின்ற காலத்திலும் பல்வேறு  சிகை அலங்காரங்கள் இருந்தன.சில மாணவர்கள் கமல் காசனின் சத்தியா படத்தை  பார்த்து விட்டு சிகையை கட்டையாக    வெட்டி வந்தார்கள்.அதை அப்போது பார்த்தவர்கள்  அதை கண்டிக்க தக்கது என்றார்கள்.இப்போது மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமென  ஆசிரியர்களும் நினைக்கிறார்கள்  என்றால் முன்பு வெறுக்கப்பட்ட  முடி கட்டையாக வெட்டப்பட்ட சத்தியா கட்டைதான்.

சிகை அலங்காரமென்பது ஒருவருடைய  முகத்துக்கு ஏற்றவகையில்  அமைவது.பிறப்பில்  அவர்களுக்கு அமைந்த முடி அழகு அடிப்படையில்  அமைவது.சிகை அலங்காரம் கூட ஒருவரால் இன்னொருவர் மீது திணிக்க  பட முடியாதது.இந்தியாவின்  புதுவை மாநில  கிரண்  பேடியை பாருங்கள்.அவர் ஒரு பெண் அவர் வழமையாய் பெண்கள்  போல நீண்ட முடி போட்டு இரட்டை சடை  போடவில்லை.மறைந்த இந்தியாவின் பெருமை அப்துல் கலாமை  கவனித்தீர்களா அவரின்   சிகை அலங்காரம் ஒரு தனி பாணி.அவ்வாறே பிரபலமான  ஒவ்வொருவரின் அடையாளம்  அழகில் முடி அலங்காரமும் இன்றியமையாத  ஒன்றாகி போயுள்ளது.ஆசிரியர்கள் மாணவனுக்கோ  மாணவிக்கோ  சிறந்த உதாரண  புருஷர்களாக மாறுங்கள்  அதாவது ரோல் மொடல் ஆக இருங்கள்.அப்போது தனக்கு உரிய ரோல் மொடலை பள்ளிக்கு  வெளியில் மாணவர்கள் தேட மாட்டார்கள்.எங்கள் காலத்தில் அவ்வாறான ஆசிரியர்கள் இருந்தார்கள்.எனக்கு கொலர் வைக்காத  மேல் சட்டையில் இரண்டு பக்கமும் பாக்கெட்  வைத்த நஷனல்  சேர்ட்  போட வேண்டு மென  ஆசை வந்தது அமீர்கானை  பார்த்தோ  ரஜினி காந்தை  பார்த்தோ அல்ல நான் படிக்கிற  காலத்தில் கல்வி பணிப்பாளராக இருந்த அமரர்  பொன் சபாபதி அவர்களை  பார்த்தும்.அக்காலத்தில் இயக்க பொறுப்பாளராயும்  நல்ல பேச்சாளராயும் இருந்த கண்ணாடி சந்திரன் என்ற லெப் கேணல் சந்திரனை பார்த்தும் தான்.

நாங்கள் படிக்கின்ற காலத்தில் மாணவிகள்  மற்றும் குமரிகள்  சைக்கிளில்  செல்லும்  போது அந்த பாவாடையை  காற்றில் பறக்காமல் ஒரு கையால்  பொத்துவதிலியே  பாவம் அவர்களின் கை உளைந்து விடும்.தொடைக்கு  மேல் பாவாடை  போய் விட கூடாது என்ற காலத்திலும் சில்க் சுமிதாவின் கவர்ச்சியே தேவ  அமிர்தம் என இளைஞர்கள் வெளியில் சொல்லாமல் ரசித்து மெலிந்த காலத்தில் எங்கள் ஊர் மாலதி சுகுணா  என்ற இரண்டு கிராமத்து பெண்கள் தொடைக்கு மேல் தெரியும் காற் சட்டையோடு  வந்து நின்ற போது திகைத்து போனார்கள் ஆனால் அவர்கள் சிறந்த ஓட்ட  வீராங்கனைகள்  எனும் போது எல்லாமே சகஜமாகி போனது.அது மாலதி சுகுணாவின்   ஸ்டைல் என்று ஆகி போனது ஒரு மாணவன் அல்லது  மாணவி ஒரு ஆளுமை அற்ற  ஒருவராக  இருக்கும் போது அவர்களது  சிகை அலங்காரமும்  அழகற்றதாகவே தோன்றும்.சமூகத்தின் பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடமும்  மாணவர்களிடமும் உண்டு.

சினிமாவில்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தியாவில் சிகை அலங்காரத்துக்கென ஒரு தீர்மானம் கொண்டு வந்ததாக  தெரியவில்லை.மாணவர்களை கையாள்வது என்பது ஒரு கலை.அது கைவர  பெற்றாலே  தானாக யாவும் மாறும்.இயக்கங்கள் சுட்டு போடும் என்ற காலத்திலும் மரவள்ளி தோட்டத்தில் கிடங்கு  வெட்டி கறுப்பு வெள்ளை டிவியை அதற்குள் இறக்கி கார் பற்றரியில்  கரண்ட்  குடுத்து  வெளிச்சம் வெளியில் வராமல் சரத்தால் மேல  மூடி  படிக்க  போறம் என்று பொய் சொல்லி விடிய  விடிய குந்தி இருந்து மற்ற படம் பார்த்த  பையன்கள் அடுத்து நாள் யாரையும்  கற்பழிக்கவில்லை.மாறாக ஆளாளுக்கு  முகத்தை முகத்தை பார்க்க வெட்கப்பட்டார்கள்.இது வரையில் கற்பனையில் வரைந்த ஓவியத்தின்  உண்மை இது மட்டும் தானா என்ற கதையாய்  போயிற்று.பிறகு மரவள்ளி தோட்டத்துக்குள் பன்றியாக வேண்டிய ஆவல் அந்த பையன்களுக்குள்  இருக்க வில்லை.அதாவது காலம் மாறிவிட்டது.இந்த உலகத்தில் கையில் செல் போன் இன்றி எவரும் இல்லை அதுவே பலரின் ஏன் மாணவர்கள் பலரின் உலகம்.  அதையும் கடந்து மாணவர்களை கவர்ந்திழுக்க  ஒரு ஸ் பைடர் மான்  அளவுக்கு ஆசிரியர்களும் மாணவர்  உளவியலும் நிறைந்த அதி சாகச  உதாரண புருஷர்களாக மாறியே ஆகவேண்டும்  காலம் அழைக்கின்றது.பல ஆசிரியர்கள் அவ்வாறு  உள்ளார்கள் என்பதும் எம்மண்ணில் போற்ற தக்கது.பெற்றோர்கள் தங்களுக்கான  பொறுப்பை  ஆசிரியர்களிடமும்   ஆசிரியர்கள் தங்களுக்கான பொறுப்பை சிகை அலங்கரிப்பாளர்களிடமும்.சிகை அலங்கரிப்பாளர்கள்  தங்களுக்கான சமூக  பொறுப்பை வேறு இன்னொருவரிடமும்  சுமத்தாமல்  இருப்பதில்  சமூக இயக்கம் இயல்பாக  ஓடும்.அண்மைய சிறந்த உதாரணம் தனது நிறுவனத்துக்கான பொறுப்பை இன்னோரு தரப்பிடம் சுமத்தாமல் தனது நிர்வாகத்தின்  கீழ்பட்ட வைத்திய  சாலையில் ஸ்மார்ட்  போன் தடை செய்த வைத்தியர்  கலாநிதி சத்திய மூர்த்தி

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...