Sunday, January 6, 2019

ஒரு கறுப்பனின் வர்ணங்கள்-,பொன்.காந்தன்


மிட்டாயை  உரித்து
வாயில் போட்டுவிட்டு 
மனம்
என்ன நினைத்ததோ
உறையை
கண்ணில் வைத்து பார்த்தேன்
எனது
ஐந்து வயது இனிய உலகம்

திரும்பவும் கடைக்கு  போய்
மிட்டாய்கள் வாங்கினேன்
எனது தெரு பச்சை
வீடுகள் மஞ்சள்
மலர்கள் நீலம்
வானம் ஊதா
கொடிகள் சிவப்பு
இந்த கறுப்பனின் காலம்
எவ்வளவு
அழகாய் இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...