இழுத்து வைத்துளது நினைவு
உன்னால்தான்
மண் இன்னும் இனிக்கிறது
பழுத்து இருக்கிறது கனிகள்
உன்னால்தான்
விழுத்த எழும் சந்ததிகள்
உடுத்து என்கிறது நிர்வாணம்
உன்னால்தான்
ஒட்டி இருக்கிறது மானம்
கட்டவிழ்கிறது மனம்
உன்னால்தான்
கவிதை இன்னும் பனிக்கிறது
மொட்டவிழ்கிறது மலர்
உன்னால்தான்
அஞ்சலி இன்னும் ஆள்கிறது
விட்டுவிடென்கிறது மனம்
உன்னால்தான்
சிவப்புமஞ்சள் ஆகிறது
தொட்டுவிடென்கிறது துரோகம்
உன்னால்தான்
தூர நிற்கிறது மானம்
பட்டுவிடும் என்கிறது பார்வை
உன்னால்தான்
படரும் என்கிறது கொடி
அச்சம் என்கிறது கனவு
உன்னால்தான்
கடந்துவிடிகிறது இரவு
முடியாதென்கிறது பயணம்
உன்னால்தான்
முளைக்கும் என்கிறது கால்கள்
உடையாது என்கிறது விலங்கு
உன்னால்தான்
உயிர்க்கும் என்றது வெடிப்பு
பசியா என்றது காலம்
உன்னால்தான்
பணியோம் என்றது தேகம்
குளிரா என்கிறது துருவம்
உன்னால்தான்
விறையோம் என்கிறது தாகம்
கரைவோம் என்கிறது மோகம்
உன்னால்தான்
நிறைவோம் என்கிறது ஈழம்
வரமோ என்கிறது சாபம்
உன்னால்தான்
அறமோ என்கிறது ஆன்மம்
சுரமா என்கிறது வீணை
உன்னால்தான்
உதிர்ந்த விரலா என்றது பாடல்
நதியா என்றது கடல்
உன்னால்தான்
நிமிர்வு என்றது மலை
திலீபா நீதான் என்ன விலை!!
No comments:
Post a Comment