Saturday, October 20, 2018

தடிமன் மகிழ்ச்சி-பொன்.காந்தன்




அண்டைக்கொரு நாள் காலை
அள்ளிவார்த்து தலையில்
மண்டை காய துவட்டி
மயிர்கள்  ஈரம் காயாதிருக்க
நிண்டு நீர்கள் கோர்த்து
இண்டைக்கொரு செருமல்
பிறகிடைக்கிடை தும்மல்
மண்டைச் சளியாக்கி
மாட்டுத்தும்பல் தொடர்;ந்து
தொண்டை அரிப்பாக்கி
தொய்வாய் மூச்சிழுத்து
துரவு நீர் பாய்ந்து
தோட்டம் வருவதுபோல்
வாட்டமுற்ற முகத்தில்
வழிந்த மூக்குத்துடைத்து
சேட்டமாய் ஒரு கடையில்
இஞ்சித் தேனீரொன்று
இஞ்சினுள் விட்டால் கொஞ்சம்
தஞ்சக் கேடு தீருமென
தாங்கி ஏற்றிச்சென்ற
தங்கரதத்தை ஓட்டும்
தம்பியிடம் சொல்ல
கொஞ்சம் பொறுங்களென
குச்சொழுங்கை சிலவிட்டு
குறுக்கால் வெட்டியோடி
கொண்டுபோய் இறக்கி
குடிப்போம் தேனீரென்று
குந்தி இருந்து கொண்டு
குடிக்கச் சூடாய்
என்ன உண்டென
உறிஞ்சும் மூக்கோடு
சண்டிக்கட்டோடு நின்ற
வண்டி பெருத்தவரிடம்
வாஞ்சையோடு கேட்க
மல்லித்தண்ணிவரை
மனுசர் அடுக்கiவைத்தார்
மெய்யாய் மிக மகிழ்ச்சி
சொல்லிவேலை இல்லை
மல்லித்தண்ணிஇதம்
முந்திச்சிறுவயதில்
சிறுகாய்ச்சல் என்றாலும்
மல்லித்தண்ணி அவித்து
மருந்தாய் ஊட்டும்
அம்மாவின் நினைவு
அப்போது வந்துபோக
மல்லித்தண்ணிவிற்கும்
மனதுக்கினிய கடை
அரிதாய்காணச்செய்த
தும்மலுக்குகோர் நன்றி
எப்பன்தடிமன் என்றால்
ஏகப்பட்ட தைலங்களை
ஓடுப்பட்டு வாங்கி
ஊருபட்ட இடங்களில்
மாறுபட்டும் தடவி 
எரிவு தாங்காமல்
எழும்பிக்குதித்து
எ பி சி டி சற்வரை
எல்லாக்குளிசையும்
தெண்டிமுண்டிவிழுங்கி
தெளிந்து நிமிர்கின்ற
இக்காலத் தோரணையில்
அக்காலப் பாணியிலே
அனைவரையும் கவந்திழுக்கும்
இக்கடையை ஊரரார்
சொக்கண்ணை கடையென்றே
சுற்றிலும் அழைப்பெரென
பக்கத்துத் தம்பி
பரபரத்தான் எனக்கு
அந்தியும் காலையும்
இப்பந்தியில் வரும்
தரப்புக்களும்
உண்டு மகிழ்ந்து
ஊர்ப்புதினம் பறைந்து
பெண்டிலுக்கு பயந்துசிலர்
வெளியில் குந்தி
சுருட்டுப்புகைவிட்டாத்தி
புறப்படும் இடமிதென்று
இன்னும்விளக்கினானவன்
ஓ சொக்கண்ணை நீர்தானோ
பரிமாறிகொண்டிருந்தவரை
பார்த்துநான் கேட்டேன்
இல்லை அவர்என்அப்பா
அதோ என்றார் கைநீட்டி
வெள்ளைஜிப்பா
வகிடெடுத்த உச்சி
கலண்டருக்கு அருகில்
கறுப்புவெள்ளைபடமாக
விளக்கொன்றின்முன்னே
சொக்கண்ணை சுவரிலே
வைத்தகண்வாங்காமல்
வடிவாக பார்த்தேன்
இற்றைக்கு
தொண்ணூற்றைந்து
ஆண்டுக்கு முன்னவர்
நட்டுவளர்த்த கடையென
நயமாயுரைத்தகன்றார்
வாட்டமுற்ற மேனிக்கு
பாட்டன்கையாலொரு
மல்லித்தண்ணிமகிழ்ச்சி

















No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...