Friday, October 19, 2018

ஒரு காதல்-பொன்.காந்தன்





இப்போதெல்லாம்
உன்னை நம்பமுடிவதில்லை
ஒரு சந்தேகத்துடனேயே
உன் மீதான காதல் தொடர்கிறது
உன்னை வெறுக்க முடியவில்லை
நினைவுகளில் நீந்துகின்ற நீ
வெறுக்க முடியாதபடியும்
என்னை வசீகரித்து வைத்திருக்கிறாய்

உன்னை வெறுக்கிறேன்
இனி உன்னிடம் வரப்போவதில்யென
ஒரு முறை சத்தியம் செய்து விலகியபோதும்
அது பொய்யானது என விரைவிலேய
உனதருகில் அழைத்தாய்

நேற்றும்கூட 
உன்னை பற்றி காதில்விழுந்த செய்தி
என் சந்தேகம் 
சரியென்பதை ஒப்புவிக்கிறது
நம் இருவருக்குமிடையிலான காதலில்
ஒரு கருங்கோடு விழுகின்றதுபோல
அது நிரந்தரமாகிவிடும்போலவும்
என் மனம் சொல்கின்றது

இடைதழுவி கரம்கோர்த்து
ஓன்றென இருந்த காதலுறவு
தள்ளி தள்ளி நின்று 
புன்னகைப்பதாயும்
எட்ட எட்ட நின்று கைகாட்டிச் செல்வதாயும்
விரிசல் 
நம் இருவருக்குமிடையில்
நீண்ட மௌனங்களையும் விதைக்கின்றது
எப்போது எப்படி 
நீ பேசுவாயென புரியாமல்
தடுமாற்றத்துடன்
தொலைவிலாகிறேன் கண்ணீருடன் 

எத்தனை
நிலாப்பொழுதில் ஒன்றாய் இருந்தோம்
பொன்னந்திகளில் சந்தித்தோம்
உன்னை ஓவியமாய் வரைந்தேன்
கவிதையாக்கினேன்
இசையூட்டி பாடினேன்
நீ ரசித்திட ஆடினேன்
எல்லாவற்றையும் மறந்து
சில கணங்களில்
உன் முகமும் வார்த்தைகளும்
என்னை வெறுக்கச்செய்வதாய்
மாறுவதேன்

உனக்கு நினைவிருக்கிறதா
ஒரு அழகிய கிறீஸ்மஸ் நாளுக்கு மறுநாள்
ஒரு காலைப்பொழுதில்
உன் மீதான என் காதலை
நீ அசிங்கப்படுத்தியது
அதன் பிறகும் உன் பின்னால் வந்தேன்
பிறகு நீ என்னை காதலிப்பதுபோல
காதலிக்கவில்லை என்றே
என் மனம் சந்தேகப்படுகின்றது கடலே!





No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...