முள்ளில் தொடங்கி
ரோஜாவில் முடியும் சிலரை
அவ்வப்போது சந்திக்க நேர்ந்தது
முட்களின் மீது
பிரியம் உண்டான பொழுதுகளில்
சின்ன சின்ன கீறல்களில்
முகிழ்களின் வேரை தொடுதல்
ஆழகிய ஸ்பரிச மொன்றின்
தொடக்கமாயிற்று
மலர்கள் வாரி சொரியும் கணங்களில்
களவாடப்பட்ட
என் புன்னகையின் மீது
முள்முடிகள் தரித்துப் பார்க்கும்
வன்மங்கள்
முள்ளில் தொடங்குதல் மீது
அர்ப்பணத்தையும் காத்திருப்பையும்
எனக்கு விட்டுச்சென்று கொண்டே இருந்தன
நான் முள்ளின் காதலன் என்று
பிரகடனத்தை செய்ய
போதுமான சாட்சியங்களோடு
ரோஜாக்களின் நடுவில்
ஒரு பட்டாம்பூச்சி என்னுள்
கூடுவிட்டு கூடுபாய்ந்த கணத்தில்
திமிருறுகிறேன் முள்ளின் புன்னகையோடு!!
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment