Tuesday, October 23, 2018

எனது சொற்கள்-பொன்.காந்தன்


போரில் தொலைந்த ஆல்பத்தை
மீள காணக்கிடைத்தபோது
அதிலும் கூட
படங்கள் காணாமல் போயிருந்தன
அதிலும் கூட நான் தனித்துப்போயிருந்தேன்
அதிலும் கூட
காயங்கள் ஏராளம் பட்டிருந்தன
அதுவும் கூட
இதுவரையில் ஆங்கோர் முட்செடிகளிடையே
அகதியாய் வாழ்ந்திருந்தது
படங்களை இழந்த ஆல்பத்தை
ஒரு புகைப்படம் பிடித்துக்கொண்டேன்
ஒரு புதிய ஆல்பத்தில் முதற்பக்கத்தில்
அப்புகைப்படத்தை செருகி
இதுதான் எனது ஆல்பம்
இதில்தான் எனது படங்கள் இருந்தன
ஏன கதையை தொடங்கி
வீட்டு முற்றத்தில் வந்தவர்களோடு
என்னை சொல்லும் சொற்றகள் இன்றி
தடுமாறிக்கொண்டும்
தவித்துக்கொண்டும் இருக்கின்றேன்!














No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...