Tuesday, October 23, 2018

வல்லைநல்லை-பொன்.காந்தன்


வல்லையில போகவர கண்ட முகமொன்றே

வாய்நிறைய புன்னகையை தந்த முகமொன்றே
கொல்லையில நின்றுஎனை புலம்பவைத்ததென்றே
நல்லையில விழுந்தெழும்பி நவின்ற முகமன்றே
எல்லையில காதலிலே ஏக்கமுறச் சென்றே
சொல்லையில வாயுழற வார்த்தையுடன் நின்றே
சொல்லாமல் தடுமாறி சுருண்ட மனம் வென்றே
வெடுக்கென்று விருப்பத்தை விட்டெறியவொன்றே
வழியெனக் கடவுளர் கண்ட வரமென்றே
வட்சப்பு வைபர்களை வாழ்த்திடுவாம் நன்றே

கொண்டலடி கோவிலடி குறுக்குதெரு வரவே
நித்திரையில் தொடுதிரையில் தூறியது பரவ
கண்டபடி பொய்யுரைத்த கழன்றுநிதம் உலவ
வந்தவரம் கைகளிலே வகைவகையாய் இருக்க
வாயூறிக் கொந்திவிட கொஞ்சல் பல உருக்க
வஞ்சகங்கள் வார்த்தைகளாய்வடிவெடுத்து பெருக்க
சங்கரிக்க முடியாமல் சஞ்சலங்கள் தவிக்க
சகலகலா கடவுளரின் வரமெல்லாம் கசக்க
அந்த வழி போனவரை ஆருயிரில் ஏந்தி
அடக்கிவைத்த காதலினை ஒருவாறுமுந்தி
சொல்லிவிடும் மனத்தவிப்பு இந்நாளும்மீள
வல்லையில போகவர கண்டவரின்காதல்
வாழ்கவென வரம்கேட்டு நல்லையிலவிழுவீர்!






























No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...