Friday, October 19, 2018

எதையெடுக்க! எதைவிட!!-பொன்.காந்தன்




ஏழடி மதிலை எகிறிக்குதித்து
ஏழெட்டுபேர் வாள்கையில் கொண்டு
காதடிவரையும் கறுத்ததால் கட்டி
கர்;ச்சித்தபடி கதவினையுடைத்து
ஊரினைக்கூட்ட ஊளையிட்டீரெனில்
உயிரினையெடுத்து உதிரத்தையிங்கு
கழுத்தினையறுத்து கால்வாயிலிடுவோம்
மறுத்துப்பேசாது மரியாதையாக
மௌனமாய் குந்தி மறுபேச்சின்றி
வரும்படியின்றி வாளேந்திய நாம்
தரும்படி கேட்கும் தாலிக்கொடி
தங்கநகை பணம் தொலைபேசி
எங்கு வைத்தீரென்று இடம்சொல்லி
இனிதே பணிமுடிய ஒத்துழைத்து
இருப்பீர் என அறிவித்து
எட்டுப் பத்து அறைகொண்ட
அப்பெரிய வீட்டினுள்ளே
கள்வர் பார்வையை ஓடவிட
பார்க்க பார்க்க ஆச்சரியம்

பட அறை பக்கமெல்லாம்
இடமின்றி கடைபோல
ஏகப்பட்ட விலையுயர்ந்த
ஏறுவரிசை எண்கள் போல
உருத்திராட்சக் கொட்டை முதல்
கடவுளுக்கு சட்டை வரை
சந்தணப்பட்டை முதல்
சாம்பிராணி தட்டுவரை
வங்கத்து கடல்தாண்டி
வாங்கி வந்து குவித்துள்ளார்
அடுக்கடுக்காய் அறைமுழுதும்
உடை நிரம்பி வழிகின்றது
படைபடையாய் அலுமாரி
அதனுள்ளும் பல அடுக்கு
உடை பிதுங்கி வழிகின்றது
அடங்காமல் கொடிமுழுதும்
நார் தும்பாய் நவமோடி
கிழிந்தும் கிழியாத
கீழ் மேல் ஆடையணி

அடுத்து நோக்குங் கால்
ஆள்திருத்தும் அறையொன்று
கால்கை நகம் தொட்டு
கண்ணிமை காதுவரை
கழற்றி மாற்றும் வசதிப்பாடு
பூசி மெழுகிப் புதுப்பிக்க
போத்தல்களில் திராவகங்கள்
பாசி பிடிக்கும் பல்லுக்கும்
பால்போல் பளபளக்க
விறிசியடித்து விளக்கிவிட
வெளிநாட்டு ஐட்டமொண்டு

வாரமேழும் வகைமாற்றி
வாத்துகொக்கு குதிரையென
நடைபோட்டு படம்காட்ட
உடைகேற்ற காலணிகள்
உட்கட்டு மாணங்களை
பாதி மடங்கு பெருப்பித்து
பச்சைப்பொய் நூறுரைக்க
பலவேட அடுக்கணைகள்
அட திருடா எதையெடுக்க களவிங்கு

கிச்சன் முழுக்க பட்டன் சிஸ்டம்
மட்டன் மரக்கறி மாய்காய்பாதி
மாதக்கணக்காய் உறங்கப்பெட்டி
மிக்சி கிறைண்டர் வோசிங்மிசன்
தோய்க்க தேய்க்க எல்லாம்மெசின்
அம்மிகுளவி ஆட்டுகல்உரல்உலக்கை
ஊதுகுழல் தம்பி ஆடிய மரக்குதிரை
தடவிப்பார்த்தும் காணவில்லை
வண்டிதொந்தி உடம்பிளைக்க
நிண்டுகொண்டோட ஒரு சைக்கிள்
பண்டிபோல திண்டுகொளுத்து
பள்ளிப்படிப்பை இடையில்விட்ட
கண்டாறிவிக்கொரு பல்சர்பைக்
பார்த்துப்பேச ஒரு ஐபோன்
பாடல்கேட்க இன்னொன்று
காற்று வாங்க கார் ஒன்று
ஆளுக்கொரு மின்விசிறி
அகலத் திரைத் தொலைக்காட்சி
மாபிளில் வீடு மாடியிலும் இடமுண்டு
கோடை கொழுத்தும் வெயிலில்
மேனி வாடிவிடாதிருக்க குளிரூட்டி
வாடாத பூங்கன்று அது வளராது
வண்டுக்கு தேனில்லா பூவோடும்கூட
மாட்டுக்கொட்டிலில்லை
மறி ஆட்டுப்புளுக்கையில்லை
கூட்டிலிருந்த கூவ
கொழுத்த வெள்ளைச்சேவலில்லை
தாட்டுவைத்தார் எங்கு
தாலிக்கொடி அட்டியல்கள்
தங்க நகை வளையல்களை

ஆளுக்கொரு பர்ஸ்
ஆறேழு கான்ட்;பாக்
எட்டுப்பத்து ஏரிஎம் காட்
உண்டியலில் காசு வந்த
ஊருபட்ட துண்டுகள்
கண்டி கதிர்காமம் கால்பேஸ்
சுற்றுலா போய்வந்த
சுற்றி சுற்றி செல்பிக்கள்
அத்தனையும் பார்த்து
ஆடிப்போனான் திருடன்
எதையெடுக்க எதைவிட!!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...