நாலைந்து நாட்கள் முன்
நள்ளிரவு நேரமாக
நாரிமுறித்து ஓர் உளைவு
நாவரண்டு நீர் விடாய்
மாறிப்படுத்தும் தூக்கமில்லை
மண்டைக்குள் கொஞ்சம்வலி
கருக்கலுக்குள் வயிறுளைந்து
களியாக போய் இளைப்பு
எழுந்துகாலை இரண்டுகுளிகை
எடுத்து விழுங்கமுடிந்துவிடும்
என்று சரிந்து கிடந்துவிட
தொடங்கியது வயிற்றோட்டம்
தொடர்வண்டி பயணம்போல்
குடலறுந்து விழும்போல
கொட்டியது தண்ணியாக
உடலிளைத்து மயக்கம்
ஒரே நாளில் உடல்மெலிவு
மடமடன்று நீரருந்தி
மறித்து கட்டிவிட்டுவிட
எத்தணித்து எத்தணித்து
ஏதும் பயன் இல்லை
உள்ளிருந்து ஓர்பயம்
உருவெடுத்து வெளிவந்து
nks;s
சுவர் பிடித்து
மேனி நிமிர்த்தி
டெங்கு பன்றி வைரஸ்என
எச்சரித்த குறிப்புக்களை
எடுத்துப்பார்த்து
படுத்திருந்த அறைசாத்தி
படுநிர்வாணம்ஆகிநின்று
எங்கேனும் கொப்பளங்கள்
கண்புருவ வலி
கால்கை மூட்டுளைவு
இன்னபிற அறிகுறிகள்
என் உருவில் ஊறியதா
கால்தொட்டு தலைவரை
கண்ணாடி முன்னின்றும்
என்னாலேயே சகிக்கவியலா
இடங்களையும் பார்த்தேன்
இல்லை இல்லை
எனக்குள் சிறு அமைதி
பிறகெதற்கு இவ்விளைப்பு
கணவாய் பண்டி கண்டதுகள்
முன்னிரவில் தொட்டதில்லை
கடைத்தண்ணி ஏதும்
கலக்கி அடிக்க காரணமோ
இருந்தாலும் டெங்குபயம்
என்மீது தொற்றி நிற்க
கண்ணை தூங்கவிட
கால்வரை இழுத்து
கம்பளியொன்றால் மூடி
கடினமாய் முயலுகையில்
ஏதேதோ நினைவுகள்
எத்தனையோ மனிதர்கள்
காப்புரிமை கரச்சலற்ற
கன நல்ல பாடல்கள்
அதில் எந்தன் காதல்கள்
கடினமான துன்பங்கள்
கழிந்துபோன ஏக்கங்கள்
நிறைவேறா நியாயங்கள்
எத்தனையோ எத்தனையோ
காய்ச்சல் வேளையில்
கண் கதவு தட்டி
நெடுவரிசை போடுகையில்
தொலைதூர நாயொன்று
ஊளையிட்டு ஓய்கையிலே
எருமையில் ஏறியவன்
எங்கேனும் தோன்றினனோ
என விழித்து எழுந்து குந்தி
இயன்றவரை நீர் குடித்து
அவ்விரவு திகில்கள்
வன்னியிலே இதுவரையில்
வாழுகின்ற என்மேனி
காய்ச்சலை கண்டது
கைவிரல் எண்ணலாம்
நோய்களை துரத்தும்
தூரவீச்சு ஏவுகணை
இயல்பாக என்னுள்ளே
ஈராயிரத்து ஒன்பதுக்குள்
வலுவாக இருந்ததுபோல்
இப்போது என்ன
இளைப்பு தடுமாற்றம்
மருந்துகள் வராத
மட்போர் வேளைகளில்
மாரியென பாய்ந்த
மலேரியா காலரா
ஒடுக்கினர் எம் பெடிபெட்டை
ஒருபோதும் எனக்கு
ஒருவலியும் இல்லை
தடிமாடுபோல
தாமரை கிழங்கு
தாட்டான் குரங்குவரை தின்று
உயிர் காத்த உருக்குக்கு
இன்றென்ன உறக்கமில்லை
இறந்துவிடுவேனோஎன
இழி கனவு வருகிறது
பறந்துவந்து நிறைந்த
வெடிகுண்டுமழை
மனிதரைகுலைகுலையாய்
மனம்சாக தின்றதனை
இடைவிடா முள்ளிவாய்;கால்வரை
கண்டு வந்துகாலனிடம்
தப்பிவிட்ட இவ்வதிஸ்டம்
டெங்குவிடம் சிக்குண்டு
சில நாளில் முடிந்திடுமோ
தொண்ணூறில் பின்பணியில்
இரவிரவாய் ஈடுபட்டு
இயலாத களைப்பில்
பொங்குகின்ற போர்க்களத்தில்
உயிர்முடிந்து வருவார்க்கு
உயரமாய் அடுக்கிவைத்த
சவப்பேழை திறந்துள்ளே
ஓய்வெடுத்தபோது
உருவாகா திகில்
இவ்விரவு காய்ச்சலில்
எழுந்துவிடல் என் இழிவு
மறு நாளே மருந்துக்கு
ஒருவாறு எழுந்து
ஒரு ஆட்டோபிடித்து
முடிவாக போவோம்என
கண்மூடிப்போக
சிறுவயதில் அப்பா
ஒரு சிறு காய்ச்சலென்றால்
ஓடோடியெனை காட்டும்
இரஞ்சன் டொக்டரின்
கறுத்த உருவம்
கண்களில் மீள்கின்றது
பருத்த அவ்வுருவம்
பசும்புல்லானெனை பிடித்து
பாசத்தினை பொழிந்து
gha;r;rpa
ஊசி ஸ்பரிசத்தை
நினைக்கிறது என் மனது
அக்கரும் உருவம்
காலமாகியும் கனகாலம்
இப்பொழுது இக்கட்டைக்கு
இன்றைய மருத்துவம்
என்ன செய்திடுமோ
காய்ச்சலை காட்டப்போய்
உள்ளுக்குள் உறங்கும்
ஊருபட்ட வருத்தங்கள்
மௌ;ள தலைகாட்ட
மெடிக்கல் செக்கப்பில்
ஒரு பக்கம் எழுதி
நிவர்த்திகள் தீராமல்
மறுபக்கம் திறந்தும்
மந்திரங்கள் எழுதி
ஒருபோதும் போர்நிலத்தில்
நோய்பிணி தீண்டாத
இத்திருவிருவிற்கு
தீராத நோய்களுடன்
தினம் குறிப்பு கூடிடுமோ
இருந்தாலும் இளவு
எனைமிரட்டும் இக்காய்ச்சல்
இளைப்பு சோர்வுக்கு
மருந்தெடுத்தே ஆகவேண்டும்
உயிர்காவும் டெங்கு
உள்ளிருந்துவிட்டால்
அஞ்சலிக்குறிப்புக்களை
அட்வான்சை அடிக்கவும்
ஆட்கள் உண்டு நம்மூரில்
அதனாலே
அன்பான வைத்தியனே
அடியேன் வருவேன் நாளையென்று
அசந்து தூங்கிப்போனே;ன்
ஆயினும்விட வில்லை
விடிவதற்குள் ஆறுதரம்
அடிவயிறு கலக்கி
திகில் நிறைய வைத்துளது!
No comments:
Post a Comment