Friday, October 19, 2018

ஈன்றபொழுதில்-பொன்.காந்தன்




கூடை நிறைய  கொண்டு சென்று
கோடை வெயில் குடித்து
கூவி விற்று
வருந்தியழைத்து
வாங்கும்படியிரந்து
வீடு தெரு அலைந்து
வேண்டா சில
வார்த்தையும் கேட்டு
வாடி வதங்கி
வரவு செலவு கழித்து
இரவு பகல் பாட்டுக்காய்
உழைத்த சில தாள்களை
உதித்தவள் வயிற்றில்
உதவாக்கரைகளான
பிறவி இரண்டு
பிரித்தெடுத்து
இரவு நிறைவெறியில்
நீந்திச் சரிந்தன
இன்னும் சில இழிவுடனே
வருந்திற்று அவள் வயிறு
இரண்டு வானரத்தை ஈன்றதற்காய்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...