Tuesday, October 23, 2018

இரவு-பொன்.காந்தன்

முடிவில்லா  எனது இராத்திரியில்
அவனுக்கு ஓர் குட்டிகதை சொன்னேன்
அவன் தூங்கிவிட்டான்

அவளுக்கும்
அவள் சொன்ன சிலவற்றுக்கு
தலைசாய்த்தேன்
அவளும் தூங்கிவிட்டாள்

குளிரில் தடுமாறிக்கொண்டிருந்த
நாய்குட்டிக்கு
ஒரு சாக்குதுண்டை வாசலில் விரித்துவிட்டேன்
அதுவும் தூங்கிவிட்டது

எனது கனவுகளோ
அங்கும் இங்கும் என்னை சுற்றி
அலைந்துகொண்டிருந்தன
அவற்றை தூங்க வைக்க
என்னிடம் எதுவும் இக்கணம் இல்லை!





















No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...