Friday, October 19, 2018

எனக்குத் தெரிய வேண்டிய நான்-பொன்.காந்தன்






தினமும் இளவுகளை அள்ளிவந்து
கரைகின்ற காகமாகவும்
உங்கள் எதிர்பார்ப்புக்களை
திருப்தி செய்யும்
குடுகுடுப்பை காரனாகவும்
என்னால் எப்பொழுதும் இருக்கமுடியாது

எனக்குள் அழவும்
எனக்குள் சிரிக்கவும்
எனக்குள் ஒருவனும் காத்திருக்கிறான்
ஏதாவது செய்யவேண்டும்
குரங்காட்டியை விரும்புகின்றானா
குளிர்ந்த நதிக்கரையில்
தனித்திருக்க விரும்புகின்றான
நான் அவனை அறிந்தாகவேண்டும்

ஒரு பறவை
கல்லாக சபிக்கப்பட்ட நிலையில்
சில சந்தர்ப்பங்களில்
உங்கள் நடுவில் இருக்கவேண்டியதாயிற்று
நற்செய்திகளை ஏந்திவரும்
ஏஞ்சல்களாய்
யாரையும் நானும்கூட எதிர்பார்க்கவில்லை









No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...