Tuesday, October 23, 2018

இரகசியம்-பொன்.காந்தன்

பாட்டிக்கு வயது பயிற்றெட்டு
பாக்குவெத்திலையும்
பல்லில்லா உதட்டுக்கு
மெல்லிதாய் நன்ன ஏதுமென்று
போக்கிட்டு பொழுதை
நூற்றெட்டு நினைவு மீள
சாக்கு கட்டிலொன்றில் சரிந்தெழும்பி
மூக்கு கண்ணாடியை சரிசெய்து
முழங்கால் வாதத்துடன்
முண்டுக்கு நாலு சுவர் பிடித்து
ஒண்டுக்குப்போய்வரவும்
ஒரு மணித்தியாலயம் ஆக
கொண்டை உதிர்ந்த கூந்தலை
சண்டில் கீரையாய் பிடித்து
இழுத்து இயன்றவரை சுற்றி
சந்திக்கடை சுசியம்போல
சின்ன உருண்டையாய்
ஒரு கொண்டை பிடித்து
சுடுதண்ணியில் குந்தியிருந்து
கோப்பையொன்றால்
அள்ளமுடியாமல்
அரைவாசியெடுத்தெடுத்து
அதிலும்பாதி கீழ சிந்த
பாதிநாள் இருந்து குளித்து
பட அறைபோய்
பவுடராய் திருநீற்றை
பதினாறிடத்தில் பூசி
அப்பனே முருகா ஆண்டனே
அம்மாளாச்சி மாதாவே
அம்மாபகவானே பாபாவே
மொத்தக்கடவுளையும் கூப்பிட்டு
வெற்று விறாந்தையில்
விடியவிடிய ஓடுகின்ற
வீட்டு தொலைக்காட்சியில்
கட்டமிடப்பட்டு அடிக்கடி
சிக்கினர் மாட்டினர்
இழுத்தனர் அணைத்தனர்
களைந்தனர் கறந்தனரென
முக்கிய செய்தியாய் ஓடிய
கட்டிலில் கிடந்தபடி
கலங்கலாய் தெரியும் காட்சிகளை
கண்ணாடி சீர்செய்து
எட்டி மௌ;ள கிட்டப்போய்
எதிர்நின்று பார்த்துவிட்டு
என்ன நினைத்தாரோ
அறுபத்து அண்டுகள்
முன்னதாய் ஒருநாள்
பக்கத்துக்கோயிலில்
பாட்டுக்கச்சேரி பார்த்துவிட்டு
தட்;ட தனியே
முத்தையர் வளவு கடந்து
அக்கம்பக்கம் பார்த்து
அப்பால் போகையில்
எப்பவும் கண்வைக்கும்
முருகேசு பின்னேவந்து
பற்றைக்குள் இழுத்துச்சென்ற
பரமரகசியத்தை
பத்துத்திவசம் கடந்த
செத்துப்போன கிழவனுக்கும்
எட்டுப்பிள்ளை பெறும்வரை
எதுவும் தெரியாதபோது
இப்ப எப்படி இழுத்துவிட்டார்
பெருமூச்சை!













No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...