Friday, October 19, 2018

இப்படிக்கு....-பொன்.காந்தன்




காற்றில் அலைந்து வந்து
இப்படிக்கு கிழிந்த
ஒரு காதல் கடிதத்தை எடுத்தேன்
வாசித்து முடித்தபோது
தொட்டா சிணுங்கிகள்
சூறை முட்கள்
பனி உறைந்த
குளிர் இரவுக்கு அப்பால்
ஒரு இளவரசன்
காத்திருப்பது போலிருந்தது

நெருஞ்சி முட்கள் மீதும்
படர்ந்து
பாறைகளை குடைந்து
நிலவின் ஒளியில் தவழும்
நிழலின் அழகை பெயர்த்து
பல்லவர் சிலைகளின்
மோகப்பார்வையில் நீந்தி
அவள் கந்தர்வ மேனியை
மயிலிறகால் பிரதி செய்து
ஒரு பதில் எழுதி பறக்கவிட்டேன்

ஏமாற்றப்பட்ட
இளவரசர்கள் வலியை
நானும்
தொட்டாசிணுங்கிகளும்
பகிர்ந்து கொண்டோம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...