அக் கிண்ணத்தில் இரவு
நீயே நிரம்பி வழிந்தாய்
எல்லா பட்சிகளும்
புற்களும் அருந்திய
காடு கொண்ட திருப்தியா
வான் அடைந்த அமைதியா
முக்குளித்தது
புது சிலிர்ப்பின் முதற் சொல்
இப்பிரவாகத்தில்
பெயரிடப்படாத வண்ண மலர்கள்
ஒவொரு முறையும்
பூமி முதல் முறை தோன்ற
உன்னை பற்றிய தாகம்
பிறந்திருக்க கூடும்
அக்கணங்களில் தான் இவ்விராவுமானது
கடைசி வெண்ணிலவின்
விம்பமென
வானோடும் நட்சத்திரங்களோடும்
சேர்த்து அணைத்த கனவிது
மூக்கூர்த்த நாளின் பின்
சுவரில் உரிந்து தொங்கும்
நல் வரவா!

No comments:
Post a Comment