Sunday, March 6, 2022

சினோவக் போட சிணுங்கினாள் வள்ளி !-பொன்.காந்தன்


கவசமுடுத்து கவர்வீரா கார்த்திகேயா!!
கண்ணாடியை இழுத்துவிட்டு
கல்வியங்காட்டடியில் கவனித்தேன் நேற்று
இரட்டை எருதுகள்
இஸ்டவாகனத்தின் தோகை இருபுறம்
கையேஸ் எந்த மூலைக்கு
கலாதிதான் கட்டவண்டில்
நல்லுரான் கொடியேற நாளும் கிட்டிற்று
என்ன நடக்குமாம் இம்முறை
சங்கிலியன் சிலைவரை சனத்திரள் முட்டுமா
பட்டுச்சேலைகளுக்கிடையில்
சொட்டு இடம் கேட்டு சொருகிப் போகலாமா
தொட்டுப் பேசாவிட்டாலும்
தூர நின்றென்றாலும் தூதுவிடலாமா
விடலைகள் சார்பிலும்
ஒரு விக்கினமற்ற சந்தேகம்
கடலை போடுவதற்கு கைகூடுமா காலம்
ஆயிரம் தடுமாற்றம் ஐயனே முருகா
திணைபுலத்தில் தேடுவீரோ
சினோவக் போட சிணுங்குகிறாள்
வள்ளி வரிசையில் நின்று.
கள்ளியை இம்முறை வளைக்க
கவசமிட்டு அருள்வீரோ
நள்ளிராவரையிருந்து
நாதஸ்வரத்தில் மூழ்கித்திளைத்து
வெள்ளிகளோடு பேசி
வீடு திரும்ப முடியுமா
கன்னிக்கால் முளைத்து
உன்னி எட்டுகின்றது ஆடு
பந்தல்கால் போடுதற்கிடையில் பரபரப்பு
பொடியனுக்கு பொசிற்றிவாம்
பூச்சி முட்டை போட்டு பூட்டியாயிற்று கூறை
முடக்கம் முடிவதற்க்கிடையில்
வடக்கன் நான்பனெவனும்
ஆட்டையை போடுவனோ அவளை
அந்தரத்தில் மாப்பிள்ளை
சாத்திரங்களை புரட்டிப்போட்டுவிட்டு
சீக்காய் அடிக்கிறது ஒன்று நம்தெருவில்
அதன் பெயர் டெல்டாவாம்
சாத்தியமாகுமா
குந்தியிருக்க இடமின்றி
குஞ்சியம்மாவின் மடியையும் சீற்றாக்கி
வந்துபோகும் கூட்டம் வருமா
பிந்தக்கூடாதென்று நினைத்து
பிறப்பக்கமாய் உடுத்தும்
இங்க இறுக்குதென்று பிளவுசை
இரண்டு நூல் அவிழ்த்தும்
முந்தநாளே சாறி உடுத்து
பின்னனழகை
கண்ணாடியில் பிழை திருத்தி
ஒய்யாரக் கவரிகள் வந்துலவுமா
எந்தமாதிரி
நின் தேர் தீர்த்தம் பூங்காவனம்
ஏறெடுத்துன் இளமை செழிப்பை
ஏறிவரும் தண்டிகை வனப்பை
ஊருடுத்து வீதி ஓங்காரம் முழங்க இரசிக்குமா
பாரறுத்து பரவிய படுகொள்ளை நோய்க்கு
வேலிருந்து பாயுமா வக்சின்
வேட்டைக்கு இம்முறை அஸ்ராசெனக்காவுடன்
டொக்டர் தாதியர் சகிதம்
தோன்றுவீரா தேவசேனாதிபதியாய்
ஒன்றாய் இரண்டாயிருந்து
ஊருக்குள்ளிப்போ கொன்றது நூறாய் கொரோனா
அருகில் இம்முறை
ஆயிரங்களாய் திரண்டும்மை ஆசுவாசப்படுத்தவியலா
அசரீரி அப்படித்தான் உரைக்கின்றது.
முருகன் கொத்தணிக்கு காலாயிருக்கும்
ஆளாயிரேன் அடியேனும்
இருந்தும்
கண்டா வரச்சொல்லுங்
முருகனை கண்டா வரச்சொல்லுங்க பாடலுக்கு
காவடியாடுகின்றோம் வீட்டிலேயே
உன்னை சாட்டியென்றாலும் யாழ்ப்பாணம் வர
ஊருபட்டதுகள் ஊருக்குள்ளுண்டு
காட்டிவிடும் கருணை கலைக இருளென்று!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...