Friday, July 9, 2021

வெளி-பொன்.காந்தன்


இன்று கட்டிப்போடவில்லை
வேறெங்கோ மேய்கிறது
கட்டுக்கு வராமல்
எல்லைகளுக்கு அப்பால்
ஒரு பஞ்சவர்ணக் கிளையை
முகர்ந்து பார்ப்பது தெரிகிறது
ஒரு இளக்கயிற்றை
நட்சத்திரம் வரை எறிந்தும்
நழுவிக்கொண்டது இன்று
காட்டின் இருளில் கருமையாய்
கடலின் நிழலில் நீலமாய்
மாலைவெய்யிலில் மஞ்சளாய்
போய்க்கொண்டே இருக்கிறது
இந்த வாசல்
இனியது நுழைவதற்கு போதாது
ஒரு புல்லுக்கட்டோட
இதுவரை ஏமாற்றியிருக்கிறேன்
அதுவும் ஏமாற்றியிருக்கிறது.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...