குறைந்த பட்ச சமரசமெல்லாம்
இப்போது
காலாவதி ஆகின்றன
அக்கறையோடு தரப்படும்
தேனீரில்
சர்க்கரை குறைவோ கூடவோ
எப்போதும்
சொல்லத்தோன்றுவதில்லை
கடலிலிருந்தோ
பாலைவனத்திலிருந்தோ
எதையோ கண்டெடுப்பதாய்
சாயங்காலத்து
நடுவிறாந்தை தேடுகிறது
ஒன்றல்ல பல்லாயிரம்
சின்ன சின்ன உடன்பாடுகள்
கிழித்தெறியப்பட்டன வாழ்வில்
தீர்வற்ற
பல கோடி பிரச்சனைகளோடு
தினமும்
உழன்றபடி தூங்கியெழும்புகிறது
இந்த பூமி
உயர்ந்த பட்ச சமரசத்திற்காக
சண்டைகளும் மரணங்களும்
சமாதானங்களை
எப்படி ருசிப்பது
அந்த தேனீரைப் போல!

No comments:
Post a Comment