கந்தர்வகுமரன்
பூனைப்புடுக்கு மஞ்சளில்
குளித்து மகிழ்கிறான்
தொட்டாச்சிணுங்கி தீண்டி
நாணலிலுரசினன்
வண்டுகளோடோர் குவளையில்
செவ்வரளித் தேன்விருந்து
பூசனி பூக்கள் கண்டு
மலர்ந்த விழியில்
முகம் பார்த்து
ஒரு மாயப்புன்னகைக்காய்
உதடுகளை திருத்தினன்
ஆட்காட்டிகளின் ஓசைக்காக
மாட வாசல்களை திறக்க
கட்டளையிடுகிறான்
பூனைப்புடுக்கு மஞ்சளில்
குளித்து மகிழ்கிறான்
தொட்டாச்சிணுங்கி தீண்டி
நாணலிலுரசினன்
வண்டுகளோடோர் குவளையில்
செவ்வரளித் தேன்விருந்து
பூசனி பூக்கள் கண்டு
மலர்ந்த விழியில்
முகம் பார்த்து
ஒரு மாயப்புன்னகைக்காய்
உதடுகளை திருத்தினன்
ஆட்காட்டிகளின் ஓசைக்காக
மாட வாசல்களை திறக்க
கட்டளையிடுகிறான்
ஒத்த சொல் எதிர்ச்சொல்
வீட்டுப்பாடங்களோடு
முற்றத்தில் பரவிய
விருட்ச நிழல்கள்
எங்கிருப்பினும் வருவதாக
காஞ்சனாவின்
வேயுறு தோளி பங்கன்
முற்றுப் பெறுவதற்குள்
தெருவைத் தேடும்
சுட்டிப்பாதங்களால்
தேருலா வரும் வீதிகளை
நிரப்பிடுக சேவகர்களே
இந்த கந்தர்வகுமரன்
ஆசுவாசப்பட விளைகிறான்
வீட்டுப்பாடங்களோடு
முற்றத்தில் பரவிய
விருட்ச நிழல்கள்
எங்கிருப்பினும் வருவதாக
காஞ்சனாவின்
வேயுறு தோளி பங்கன்
முற்றுப் பெறுவதற்குள்
தெருவைத் தேடும்
சுட்டிப்பாதங்களால்
தேருலா வரும் வீதிகளை
நிரப்பிடுக சேவகர்களே
இந்த கந்தர்வகுமரன்
ஆசுவாசப்பட விளைகிறான்
பூனை மயிரெனத் துளிர்க்கும்
விடலை வாசல்களை மூடி
நாணத்திரை கிழித்து
முகிழ்வாய்களில் முடிச்சிட்டு
தேவாமிர்த்தம் பாயும்
திருவீதியை சிருஸ்டித்து
பருவப்பூவாசல்களை
மயில் இறகு குட்டிபோடும்
மாயப்பொய்கைகளோடு
மறுபடியும் திறமின்
இது கந்தர்வனின் கட்டளை
விடலை வாசல்களை மூடி
நாணத்திரை கிழித்து
முகிழ்வாய்களில் முடிச்சிட்டு
தேவாமிர்த்தம் பாயும்
திருவீதியை சிருஸ்டித்து
பருவப்பூவாசல்களை
மயில் இறகு குட்டிபோடும்
மாயப்பொய்கைகளோடு
மறுபடியும் திறமின்
இது கந்தர்வனின் கட்டளை
பொன்னாடைக்குள்
தும்பிகளும் பட்டாம்பூச்சிகளும்
ஆனந்தமடையும்படி
மண்வாசம் நிரம்பிய
மழைநாள் மாலையில்
கீச்சு மாச்சுத்தம்பலத்தை
கந்தவர்வனின்
மணற்கும்பி வஸ்திரங்கள்
மழையாய் பொழியும்படி பாடுக!
தும்பிகளும் பட்டாம்பூச்சிகளும்
ஆனந்தமடையும்படி
மண்வாசம் நிரம்பிய
மழைநாள் மாலையில்
கீச்சு மாச்சுத்தம்பலத்தை
கந்தவர்வனின்
மணற்கும்பி வஸ்திரங்கள்
மழையாய் பொழியும்படி பாடுக!
கீரைப்பிடிக் கூந்தலோடு
கெந்திக்கோட்டில் துள்ளிய
மான்கூட்டங்கள்
வெறிச்சோடிய கானகத்தில்
செவ்விரத்தைக்கும்
செவ்வந்திக்குமாய் துள்ளட்டும்
இப்போது
கந்தர்வன் தூங்கப்போகிறான்
கனவு வாசல்கள் முற்றும்மூடி
ஒற்றைக்கதவு
கொண்டல்களும் மருதநிழலும்
அருவியும் சூழ
புளுதி வீதிப்பக்கம் திறக்கட்டும்
அவள் வருவாள்!
கெந்திக்கோட்டில் துள்ளிய
மான்கூட்டங்கள்
வெறிச்சோடிய கானகத்தில்
செவ்விரத்தைக்கும்
செவ்வந்திக்குமாய் துள்ளட்டும்
இப்போது
கந்தர்வன் தூங்கப்போகிறான்
கனவு வாசல்கள் முற்றும்மூடி
ஒற்றைக்கதவு
கொண்டல்களும் மருதநிழலும்
அருவியும் சூழ
புளுதி வீதிப்பக்கம் திறக்கட்டும்
அவள் வருவாள்!

No comments:
Post a Comment