Sunday, May 10, 2020

எண்ணூற்றைம்பது!-பொன்.காந்தன்,


எட்டி எட்டி பார்த்து
எண்ணூற்றைம்பதிலேறி
முட்டி இடித்து நசிந்து
மூக்கு மூக்கும் உரசி
விட்டு யாரும் எழும்ப
வெடுக்கனப் போயமர்ந்து
குட்டியிலொன்று கிறங்க
கொடுப்பமோ
இடமென நினைக்க
கட்டையில் போறதொன்று
கால் நடுங்கியேறி
ஒட்டி சாய்ந்து சரிய
எட்டிக் சைகை காட்டி
இரணை இதிலையென்று
தட்டும் முதுமை யெனுக்கும்
தத்துவத்தையு முணர்ந்து
தாராள மனம் வளர்த்து
பின்னும் போகவென
பிறகும் ஏத்தியடைந்து
முன்னும் நிற்கின்ற
முந்திரிகைப் பழ முதுகை
கண்ணுள் வைத்துருகி
கற்பனையில் மிதந்து
எண்ணூற்றைம் பதிலேறி
இந்திரலோகமும் போய்
நின்று நின்றெடுக்க
நித்திரைபோல் சரிந்தும்
தன்னைக் கடக்குமொன்றை
தள்ளி பின்னே விட
கண்ணை மூடிக்கொண்டு
காலால் ஊண்டி மிதிக்க
எண்ணூற்றைம்பது பறக்கும்
இரப்பை ஏறி இறங்கும்
இராகு தோசம் தெரியும்
சன்னலோரம் பார்த்தால்
சங்கக் கடை சுழலும்
சாந்தியின் சாபம் தோன்றும்
மின்னலொன்றில் பாய்ந்து
மீண்டும் சாந்தமாக
சந்நிதியானுக்கொரு நேர்த்தி
வல்லை வெளிக்காற்று
வருட முடியாது
பின்னும் முன்னும் எங்கும்
ஏகப்பட்ட புளுக்கம்
இருந்துமெலு மிச்சைகளால்
ஏதோவொரு மயக்கம்
ஏஜியே ஒப்பிஸ் இறக்கம்
இலந்தையடியிலொன்று
மறந்து போய்
பையை விட்டு
மறுபடியும் ஏறுமொன்று
வலங்கை பிள்ளையாரடி
வைத்திலிங்கம் கடையடி
சின்னக்கை ஒழுங்கை
செத்தவீட்டுக்குப் போயேறி
சீறிச் சீறி கதைசொன்ன
கொஸ்பிற்றலடி இறக்கம்
முட்டுக்காய் தேங்காய்
முப்பதோடு ஒன்று
சந்தையடியில் பாய
முந்திரிகைப் பழம் சிலது
முடியை சரி செய்து
சந்தணா பார்மசியிலிறங்க
சொட்டும் ஓய்வின்றி
சட்டிங்கோடு ஏறி
தொட்டுத் திரையுரசி
தட்டி தட்டி ஏதோ
தன்னை மறந்து
கெக்கட்டம் விட்டு சிரித்தது
கெட்போனுடன்
மந்திகைக்கு முன்னிறங்க
எச்ச சொச்சத்தில் கொஞ்சம்
இளைப்பாறக் குந்த
பஸ் ஸ்டாண்ட் வந்துவிடும்
கண்ணூறு பட்டுப் போச்சு
எண்ணூற்றைம்பதை
நேற்று பார்த்தேன்
எட்டுப்பேர் தான் உள்ளே
இரண்டு மீற்றர் இடைவெளி
றைவர் கணேசனின்
காதாவடி வரை முகமூடி
அள்ளி அடைகின்ற
அருமையின் பெடியன்
கண்ணை மூடித்தூக்கம்
மெல்லமாய் ஊருது
எண்ணூற்றைம்பது
எழுநூற்றைம்பது
அறுநூற்றைம்பது
அத்தனைக்கும் தலைவிதி
தந்தது கொரோனா

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...