அலாதிப்பறவை
களைத்து உட்கார்ந்திருந்த பொழுதில்
ஒரு பால்ய நண்பன்
அந்த மாய பொடி தூவிய கண்களை
மறுபடியும் நினைபடுத்திவிட்டான்
களைத்து உட்கார்ந்திருந்த பொழுதில்
ஒரு பால்ய நண்பன்
அந்த மாய பொடி தூவிய கண்களை
மறுபடியும் நினைபடுத்திவிட்டான்
கண்களுக்காய்
மட்டும்
காத்திருந்த சாலையோரத்தில்
வெறும் ஸ்ரிக்கர்களாய் மட்டும்
ஒட்டிக் கிடக்கும் பட்டாம்பூச்சிகளுக்கு
விமோசனம் கொடுக்கவேண்டிதாயிற்று
காத்திருந்த சாலையோரத்தில்
வெறும் ஸ்ரிக்கர்களாய் மட்டும்
ஒட்டிக் கிடக்கும் பட்டாம்பூச்சிகளுக்கு
விமோசனம் கொடுக்கவேண்டிதாயிற்று
கடித உறைக்குள் இருந்து
பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நதியில்
மூழ்கியிருந்த முகத்தை
கனவுலக வாசியின் சரீரத்தில் சேர்த்து
ஒரு தேவசுகம்
நெஞ்சைப் பிளிந்தூற்றுகிறது
நினைவுக் குவளைகளில்
பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நதியில்
மூழ்கியிருந்த முகத்தை
கனவுலக வாசியின் சரீரத்தில் சேர்த்து
ஒரு தேவசுகம்
நெஞ்சைப் பிளிந்தூற்றுகிறது
நினைவுக் குவளைகளில்
உனக்கென்ன பால்ய நண்பா
ஒரே ஒரு விசாரிப்புத்தான்
ஓடிவிட்டாய்
ஒரே ஒரு விசாரிப்புத்தான்
ஓடிவிட்டாய்
சுவடுகளில்
மலர்களை தூவியபடி
வாவாவென்று அழைத்தபடியே செல்கின்றது
மாயக்கண்களில் முளைத்தகாடு
படிக்கட்டுக்களில் தடுமாறி
உரசிய ஸ்பரிசங்களில்
இளைப்பாற தருணம் உண்டா
மலர்களை தூவியபடி
வாவாவென்று அழைத்தபடியே செல்கின்றது
மாயக்கண்களில் முளைத்தகாடு
படிக்கட்டுக்களில் தடுமாறி
உரசிய ஸ்பரிசங்களில்
இளைப்பாற தருணம் உண்டா
ஒரு யாத்திரிகன்
சொல்லாத இரகசியத்தை
போர்த்து மூடிக்கொண்டு
புன்னகையும் மயக்கமுமாய்
போய்க்கொண்டிருக்கையில்
உதடுகள் கனிந்த நிழல்கள்
இருக்காமல் போகாது
சொல்லாத இரகசியத்தை
போர்த்து மூடிக்கொண்டு
புன்னகையும் மயக்கமுமாய்
போய்க்கொண்டிருக்கையில்
உதடுகள் கனிந்த நிழல்கள்
இருக்காமல் போகாது
மாயப்பொடி தூவிய கண்களின்
தருணங்களை
ஒன்றும் விடாமல்
கொத்திக்கொண்ட அலாதிப்பறவை
எத்தனை அவதாரங்கள் எடுத்தும்
அந்த முதல் பார்வையை
தொட்டுத்திரும்பும்
வழி நெடுக
முயல்குட்டிகளின் உரோமம் வருடிய
புதுவார்த்தைகளை
எடுத்து வரும்
மாயக்கண்களின் புதிய கவிதைக்காய்
தருணங்களை
ஒன்றும் விடாமல்
கொத்திக்கொண்ட அலாதிப்பறவை
எத்தனை அவதாரங்கள் எடுத்தும்
அந்த முதல் பார்வையை
தொட்டுத்திரும்பும்
வழி நெடுக
முயல்குட்டிகளின் உரோமம் வருடிய
புதுவார்த்தைகளை
எடுத்து வரும்
மாயக்கண்களின் புதிய கவிதைக்காய்

No comments:
Post a Comment