தீர்த்தக்கேணிக்கு
நீராவியடி பிள்ளையார் இன்று போகவில்லை
நேற்று இரவு முழுக்க நித்திரையுமில்லை
பிறகு பள்ளியெழுச்சி எதற்கு
கண்கள் சிவந்திருந்தது
தமிழன் குண்டு போல் நிறம் மாறியிருந்தது
கையில் அந்த மோதகம்.
வியாசனுக்காய் உடைத்த தந்தம்
இன்று முளைத்திருந்தது
பிள்ளையார் வேறு ஏதோ எழுதச்சொல்கிறார்
வெந்து தணிந்த காட்டின் சாம்பலில்
நீறு எடுத்துவரச் சொல்கிறாரா
உள்ளுறையும்
முல்லை நிலச்சன்னதம் எழுந்து வரும் காலையை
இன்று நிலத்துக்கு காட்டியிருக்கக்கூடும்
இனி நீராவியடிப்பிள்ளையாருக்கு
சண்டேசுவரர் தாளம்
தட்சணா மூர்த்தி கைதட்டல் இருக்காது.
தேவாரம் அருளிப்பாடுதலில்
இனி தீயொன்று கொழுந்துவிட்டெரியும்
சீண்டிவிட்டாய் தேரனே
ஆனைமுகத்தனின் அவதாரம்
இனியொரு விதி செய்யும்
கணபதி தெய்யோவாக அவன் இனிக் காட்சி தரான்
எலியை விட்டு அவன் புலியில் ஏறக்கூடும்
குலதெய்வக்காரனுக்கு குற்றமிழைத்தவனை
இனி பலிகொள்வான்
தமிழர் நில தெய்வமாய்த்தான்
அவ்வழிபோகும் சிங்கள மகனுக்கும் அருளினான்
அவன் விழி கசிய
விசக்கூத்தாடினான் தேரன் செம்மலையில்
மொழி வேறாய் இருந்தாலும்
இதுவரை முகம் மலர்ந்தான் விநாயகன்
இனி ஐந்து கரத்தனையாக இருப்பானா
ஆறாவதும் இனி முழைக்கும்
அது அன்னியரை அடித்துத் துரத்தும் வரம் கொடுக்கும்
இன்று முல்லை நிலத்தில் கொப்பளித்த தமிழன் கோபம்
அதன் அறிகுறிதான்
நீராவியடி பிள்ளையார் இன்று போகவில்லை
நேற்று இரவு முழுக்க நித்திரையுமில்லை
பிறகு பள்ளியெழுச்சி எதற்கு
கண்கள் சிவந்திருந்தது
தமிழன் குண்டு போல் நிறம் மாறியிருந்தது
கையில் அந்த மோதகம்.
வியாசனுக்காய் உடைத்த தந்தம்
இன்று முளைத்திருந்தது
பிள்ளையார் வேறு ஏதோ எழுதச்சொல்கிறார்
வெந்து தணிந்த காட்டின் சாம்பலில்
நீறு எடுத்துவரச் சொல்கிறாரா
உள்ளுறையும்
முல்லை நிலச்சன்னதம் எழுந்து வரும் காலையை
இன்று நிலத்துக்கு காட்டியிருக்கக்கூடும்
இனி நீராவியடிப்பிள்ளையாருக்கு
சண்டேசுவரர் தாளம்
தட்சணா மூர்த்தி கைதட்டல் இருக்காது.
தேவாரம் அருளிப்பாடுதலில்
இனி தீயொன்று கொழுந்துவிட்டெரியும்
சீண்டிவிட்டாய் தேரனே
ஆனைமுகத்தனின் அவதாரம்
இனியொரு விதி செய்யும்
கணபதி தெய்யோவாக அவன் இனிக் காட்சி தரான்
எலியை விட்டு அவன் புலியில் ஏறக்கூடும்
குலதெய்வக்காரனுக்கு குற்றமிழைத்தவனை
இனி பலிகொள்வான்
தமிழர் நில தெய்வமாய்த்தான்
அவ்வழிபோகும் சிங்கள மகனுக்கும் அருளினான்
அவன் விழி கசிய
விசக்கூத்தாடினான் தேரன் செம்மலையில்
மொழி வேறாய் இருந்தாலும்
இதுவரை முகம் மலர்ந்தான் விநாயகன்
இனி ஐந்து கரத்தனையாக இருப்பானா
ஆறாவதும் இனி முழைக்கும்
அது அன்னியரை அடித்துத் துரத்தும் வரம் கொடுக்கும்
இன்று முல்லை நிலத்தில் கொப்பளித்த தமிழன் கோபம்
அதன் அறிகுறிதான்
No comments:
Post a Comment