எங்கேனும்
இலவங்காய்கள் வெடித்துப்பறக்கும் பஞ்சுகளை
துரத்தும் சிறுவர்கள் இருக்கிறார்களா
துரத்தும் சிறுவர்கள் இருக்கிறார்களா
தொலைபேசிக் கோபுரங்களுக்கு இடையில்
ஓவென்று அழுது கேட்க வேண்டிய
எனது கேள்விகளில்
அதுவும் ஒன்று
ஓவென்று அழுது கேட்க வேண்டிய
எனது கேள்விகளில்
அதுவும் ஒன்று
சமிக்ஞைகளுக்குள் சுருங்கிப்போய்விட்ட
தொட்டாஞ்சிணுங்கிகள் இல்லாத
இன்றைய பயணங்களில்
விடுமுறைகள் இனிப்பதாக தெரியவில்லை
தொட்டாஞ்சிணுங்கிகள் இல்லாத
இன்றைய பயணங்களில்
விடுமுறைகள் இனிப்பதாக தெரியவில்லை
எதை எதையோ விடுவித்துக்கொண்டு
அந்த சம்புக்காடுகளுக்குள்
ஒளித்துக்கொள்ளும் சுகத்தை
இக்காலம் கண்டு பிடிக்கப்போவதில்லை
அந்த சம்புக்காடுகளுக்குள்
ஒளித்துக்கொள்ளும் சுகத்தை
இக்காலம் கண்டு பிடிக்கப்போவதில்லை
நாணல்கள் வருடிய
எனது அழகிய பெயரை
சங்கேதமாக்கி தொலைந்து கிடக்கிறது
காற்றின் மொழி
எனது அழகிய பெயரை
சங்கேதமாக்கி தொலைந்து கிடக்கிறது
காற்றின் மொழி
மிதிபலகை பயணியின்
அந்தரப்பிடியில்
கடந்தவிட்டவைகளின்
கிறுக்கல் காட்சிகளாய்
பொறுக்கி எடுக்க முடியாதபடி
சிதறுண்டு சிதறுண்டு செல்லும் நாட்கள்
அந்தரப்பிடியில்
கடந்தவிட்டவைகளின்
கிறுக்கல் காட்சிகளாய்
பொறுக்கி எடுக்க முடியாதபடி
சிதறுண்டு சிதறுண்டு செல்லும் நாட்கள்
ஒரு திருப்தி இல்லை
தோட்டத்து வெளிகளில்
ஒட்டொட்டிகள் பிடித்திழுக்க
பட்டத்தின் நுனிகள் பிடித்திருந்து
இந்த வானை அழகுபடுத்திய
அந்த என் அழகிய கண்களை விட!
தோட்டத்து வெளிகளில்
ஒட்டொட்டிகள் பிடித்திழுக்க
பட்டத்தின் நுனிகள் பிடித்திருந்து
இந்த வானை அழகுபடுத்திய
அந்த என் அழகிய கண்களை விட!

No comments:
Post a Comment