அன்று அதிகாலையிலேயே எழுப்பப்பட்டேன்
அன்று தொடக்கம்
அது புதிய வழக்கமாகின்றது என் வாழ்க்கையில்
குளிர்ந்த நீரில்
குளிப்பாட்டப்பட்டேன்
தலையை நன்றாக அம்மா துவட்டினார்
பெட்டிக்குள் இருந்த
புதிய காற்சட்டை சட்டையை அணிவித்தார்கள்
தெருவில்
காலைச்சந்தைக்கு வாழைக்குலைகளும்
கீரை மரக்கறிகளும் கட்டிக்கொண்டும்
பாண்களை அடிக்கிய பெட்டிகளோடும்
துவிச்சக்கர வண்டிகள் போய்க்கொண்டிருந்தன

என் நெற்றியில்
அழுத்தமாக திருநீறி பூசினார் அம்மா
தண்ணீர்போத்தல் புத்தகப்பை கொழுவியபடி
அப்பாவின் சைக்கிளில் முன்னே அமர்ந்திருந்தேன்
தெருவில் மாடுகள் படுத்திருந்தன
இளையாம்பியின் தோட்டத்துக்கு அடித்த
மருந்து காற்றில் பரவியிருந்தது
வீட்டுக்கு அருகில் இருந்த பெரிய பாலையின் உச்சத்தில்
பெரிய பட்சி குந்திக்கொண்டிருந்தது
பால் கார மணியண்ணை பட்டிக்குள் நின்று கொண்டிருந்தார்
ராசையரின் மூத்தமகனின் மகிழுந்து
ஊதிபத்தி வாசனையும் பெற்றோல் வாசனையும் பரவ
கடந்து சென்று கொண்டிருந்தது
சின்ன சின்ன குச்சொழுங்கைகளுக்குள் இருந்து
பள்ளிச்சீருடைகள் நடந்து வந்து கொண்டிருந்தன

முதலாம் நம்பர் கிளியண்ணைக்கு
அப்பா தலை அசைத்து கடக்கின்றார்
புதுப்பாலத்தடி கடைக்காரர் கடையில்
சிலர் நின்றார்கள்
கோவிந்தன் கடைப்பக்கம் இருந்து
ஒரு உழவு இயந்திரம் ஒன்று வந்து கொண்டிருந்தது
சில் வண்டுகள்
வாய்க்கால் கரையோரங்களில் இரைந்து கொண்டிருந்தன
ஐந்தடிவான் புளிபூத்துக்கிடந்தது
குளத்தில் நீர் நிரம்ப இருந்தது
கறுப்யா அணைக்கட்டில் நின்று
குளத்தை பார்த்துக்கொண்டிருந்தார்
குளத்தடி வைரவருக்கு
யாரோ கற்பூரம் கொழுத்தியிருந்தார்கள்
காணாங்கோழிகள் சம்புப்பற்றைகளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன
சிறிய துருசு வழி ஓடும் நீpரில்
சிலர் குளித்துக்கொண்டிருந்தார்கள்

இரண்டு பக்கம் தாமரைகளும் அல்லிகளும்
நிறைய பூத்துக்கிடந்தன
நீர்காகங்கள் பட்டமரங்களில் சிறகு உலர்த்திக்கொண்டிருந்தன
மீன்கொத்திகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன
பெரிய கூழா மரம் ஒன்று நின்றது
சம்புக்காடுகள் இடையே
அழகான ஒற்றையடி பாதைகள் போய்கொண்டிருந்தன
தாமரைகளுக்கும் சம்புகளுக்கும் அப்பால்
சில குடிசைகள் தெரிந்தன
தூரத்தே வெளவால்கள் மரங்களில்
வட்டமடித்துக்கொண்டிருந்தன
குளத்தை கடந்து போய்க்கொண்டிருந்தது
அப்பாவின் துவிச்சக்கரவண்டி

எதிரே பெரிய மரங்கள் வரிசையாய்
நின்று கொண்டிருந்தன
அதுவரை நான் அப்படி பெரிய மரங்களை கண்டதில்லை
பருத்த உயர்ந்த மரங்கள்
மரங்கள் இடையே போகும்போது
உடல் சில்லிட்டு குளிர்ந்தது
மரங்களின் இலைகளில் இருந்து
பனித்துளிகளும் சொட்டிக்கொண்டிருந்தன
துவிச்சக்கர வண்டியை மெதுவாக நிறுத்தி
இறங்கிய அப்பா என்னையும் இறக்கினார்
துவிச்சக்கரவண்டியை தள்ளி வேலி ஓரமாய் நிறுத்தினார்
அப்பா வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார்
கையில் ஒரு கோப்பு வைத்திருந்தார்
அதில் என்னுடைய பிறப்பு அத்தாட்சிபத்திரம்
என்னை கையில் அழைத்தபடி
அந்த வாசலுக்குள் நுழைந்தார்

பள்ளிக்கு நான் சென்ற முதல் நாள் அது
உள்ளே ஒரு அறைக்குள் அப்பா போனார்
அங்கே என்னைப்போல பலர்
குணேந்திரன் ஜெயா ஐறின்சிறானி அருள்மொழி
சிவபாலன் சதீஸ் திருவரன் செல்வகுமார் டெய்சி சாந்தி
சுகந்தி தருமராசா சிவகுமார் சசிரேகா மல்லிகா...
நீங்கள்தான் என்பது அப்போது எனக்கு தெரியாது
இன்னும்பலர்
எல்லோரையும் என் நினைவகம் பெயரிடமுடியாமல்
இப்போது தவிக்கின்றது
சுகியும் சசியும் உஜியும் உதயனும் சிவனேசனும் கணேசமூர்த்தியும்
இருந்தார்களா உங்களோடு அதில்
பிறகு காலத்தில் நிரம்பிய துயரங்கள்
பசுமைகள் பலதையும் அள்ளிச்சென்றுவிட்டன

அப்பாக்கள் எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டனர்
குளத்தடியால் திரும்பிவரும்போது
செல்வன் கைகோர்த்துக் கொண்டான்
கரடிப்போக்கு பக்கமாய் பிறகு நாட்களில்
குணேந்திரன் இழுத்துச்சென்று
தன் அம்மாவின் மடியில் என்னை இருத்தி அழகு பார்த்தான்
நகரத்தின் வழியே தருமராசா கூட்டிச்சென்று
சந்தையில் தாய் தங்கம் அக்காவிடம்
காசு வாங்கி வாய்ப்பனும் வடையும் வாங்கிதந்து
நகரில் உலவ தொடக்கிவைத்தான்
அக்காலத்தில் ஒருத்தி
ஆங்கிலமொழிப்போட்டிக்காக ஸ்பைடேர்ஸ் வெப் என
குடையை சுழற்றி நடித்துக்கொண்டிருந்தாள்
அவள் பெயரை மறந்துவிட்டேன்

கைத்தொலைபேசிகள் இப்பொழுது
எல்லாச் சிறுவர்களின் கைளிலும் நிரம்பியிருக்கின்றது
எங்கள் கைகளில் அன்று
பம்பரக்காய்கள் நிரம்பியிருந்தன
அதில் மிகப்பிடித்தமான பம்பரக்காய்கள்
காற்சட்டையின் பொத்தல்களுக்கால் நழுவி தொலைந்துவிடும்
அதுதான் ஆகப்பெரிய எங்கள் கவலை
இருந்தும் பம்பர மரங்கள் மீண்டும் தந்துவிடும்
நெடுங்காலமாய் என் மனதில்
அந்தப்பெரிய மரங்கள்
பம்பரக்காய் மரங்களாகவே இருந்தன
அவற்றை மலைவேம்புகள் என அழைக்கும்போது
அன்னியப்பட்டு விடுகிறேன்போல உணர்வு
எனக்குள்ள ஆசையெல்லாம்
அந்த பம்பரக்காய் மரங்கள்
பள்ளிக்காலம் முடிய
ஒரு விடுகைப்பத்திரம் தந்திருந்தால்
எவ்வாறெல்லாம் இருந்திருக்கும் என்பதுதான்
அந்த பம்பரக்காய் மரங்களை தவிர்த்து
எனது பள்ளிநாட்களை
எழுதிவிட முடியாதிருப்பதுதான் எனது மகிழ்;ச்சி

No comments:
Post a Comment