ஒரு இளவேனிற் பொழுதில்
கானல் தெறிக்கும் வழியில்
வட்டுவாகலை கடக்கின்றேன்
சூள் கொழுத்திய இரவுகளில்
புன்னை மரத்தடியின் மணலில்
உடல் பரவி
நண்டுகள் சுட்டுண்ட நாட்களை
இருள்சூழ்ந்திருக்க
என்னை புதைக்கின்றது
ஒரு பெரிய பிரிவுத்துயர்
கானல் தெறிக்கும் வழியில்
வட்டுவாகலை கடக்கின்றேன்
சூள் கொழுத்திய இரவுகளில்
புன்னை மரத்தடியின் மணலில்
உடல் பரவி
நண்டுகள் சுட்டுண்ட நாட்களை
இருள்சூழ்ந்திருக்க
என்னை புதைக்கின்றது
ஒரு பெரிய பிரிவுத்துயர்
குமாரசேகர முதலியாரும்
புதின்நான்கு பேரும்
வெள்ளையரால் தூக்கிடப்பட்ட
வட்டுவாகல் மரத்தின்
வழிவழி வேரில் பரவிய துயர்
கடலுக்கு வெட்டிவிடப்பட்ட பின்பும்
மிச்சமாய் தேம்பிக்கிடக்கின்றது
வட்டுவாகல் ஏரியில்
புதின்நான்கு பேரும்
வெள்ளையரால் தூக்கிடப்பட்ட
வட்டுவாகல் மரத்தின்
வழிவழி வேரில் பரவிய துயர்
கடலுக்கு வெட்டிவிடப்பட்ட பின்பும்
மிச்சமாய் தேம்பிக்கிடக்கின்றது
வட்டுவாகல் ஏரியில்
சேலை தலைப்பை வெயிலுக்கு
தலையில் சூடி
ஒரு வாடிய தாழையாய்
வந்து கொண்டிருந்த பெண்களை
நெருங்கிப் பார்த்தேன்
வெண்சங்கை இழந்த துயர்
முத்துபரல்களை
பறிகொடுத்த ஏக்கம்
கயலின் நினைவுகளில்
துவண்டு கிடந்த ஒரு பேரிரங்கல்
என்னை
மணல்மீது எற்றிற்று
தலையில் சூடி
ஒரு வாடிய தாழையாய்
வந்து கொண்டிருந்த பெண்களை
நெருங்கிப் பார்த்தேன்
வெண்சங்கை இழந்த துயர்
முத்துபரல்களை
பறிகொடுத்த ஏக்கம்
கயலின் நினைவுகளில்
துவண்டு கிடந்த ஒரு பேரிரங்கல்
என்னை
மணல்மீது எற்றிற்று
பருத்த சுறாவின் பெரும்பற்களில்
சிக்குண்ட அழகிய ஊரிகள்
நறநறவென நொறுங்கிற்றோவெனும்
தீராத ஏக்கம்
நீர்க்காக்கைகளின் நிறத்தில்
அந்த ஈழப்பெண்களில் படந்திருந்தது
சிக்குண்ட அழகிய ஊரிகள்
நறநறவென நொறுங்கிற்றோவெனும்
தீராத ஏக்கம்
நீர்க்காக்கைகளின் நிறத்தில்
அந்த ஈழப்பெண்களில் படந்திருந்தது
வட்டுவாகலை கடத்தல்
அவ்வளவு எளிதல்லவெனும்
நிலவொழுக்கம் உண்டாயிற்று இப்போது
தலைவன் பிரிவைச் சந்தித்த
அந்நிலத்தில்
தலைவிகளின் ஓலம்
இளவேனில் தகிப்பை
ஆயிரம் மடங்காக்கி கொதிக்கிறது
சூள் கம்புகளில்
தலைவனின் திருமுகத்தை பொருத்தி
காத்திருக்கின்றனர் தலைவியர்
அவ்வளவு எளிதல்லவெனும்
நிலவொழுக்கம் உண்டாயிற்று இப்போது
தலைவன் பிரிவைச் சந்தித்த
அந்நிலத்தில்
தலைவிகளின் ஓலம்
இளவேனில் தகிப்பை
ஆயிரம் மடங்காக்கி கொதிக்கிறது
சூள் கம்புகளில்
தலைவனின் திருமுகத்தை பொருத்தி
காத்திருக்கின்றனர் தலைவியர்
தாழம்பூக்களை சூழ
முள்வேலியிட்டு
தொலையாதிருக்கும் பகைவனில்
சங்குக்கழுத்துகளை குதறிய
அந்த மொச்சை
வட்டுவாகலில் பரவி
நந்திக்கடலில் நிரம்பிக்கிடக்கின்றது
பருவமடைந்த
தன் குமரியின் அழகை
சிப்பிக்களாக முத்துக்களாக
பரவி எறிந்து ஓய்ந்து
விம்முகிறாள்
வட்டுவாகலின் ஓர் கரையில் தாயொருத்தி
முள்வேலியிட்டு
தொலையாதிருக்கும் பகைவனில்
சங்குக்கழுத்துகளை குதறிய
அந்த மொச்சை
வட்டுவாகலில் பரவி
நந்திக்கடலில் நிரம்பிக்கிடக்கின்றது
பருவமடைந்த
தன் குமரியின் அழகை
சிப்பிக்களாக முத்துக்களாக
பரவி எறிந்து ஓய்ந்து
விம்முகிறாள்
வட்டுவாகலின் ஓர் கரையில் தாயொருத்தி
புன்னை மரநிழலும்
தாழம்பூவழகும்
மணற்கேணிகளும்
சூள் ஒளியின் இரவும்
நண்டு சுட்ட மணமும்
நிறைந்திருந்த நெய்தலில்
வட்டுவாகலாய்
பிரிவின் பெருந்துயர் ஒழுக்கம்
திட்டுத்திட்டாய்
செவ்வழிபண்ணை
யாழில் மீட்டிப்பாடவிடாமல்
மூடிக்கிடக்கின்றது நிலத்தை!
தாழம்பூவழகும்
மணற்கேணிகளும்
சூள் ஒளியின் இரவும்
நண்டு சுட்ட மணமும்
நிறைந்திருந்த நெய்தலில்
வட்டுவாகலாய்
பிரிவின் பெருந்துயர் ஒழுக்கம்
திட்டுத்திட்டாய்
செவ்வழிபண்ணை
யாழில் மீட்டிப்பாடவிடாமல்
மூடிக்கிடக்கின்றது நிலத்தை!
செவ்வழிப்பண்ணுக்கு
சேர்த்து வைத்திருக்கிறேன்
கோடி வரிகளை
ஓடி வருவாயா என் அழகிய
வெண்சங்குக்குமரி
பத்துவருடங்களில்
அடங்காப்பற்றின் பாடல்களுக்கு
என்ன ஆயிற்றென நினைக்கும்போது
தாரைதாரையாய்
வழிந்தோடும் கண்ணீரை
வெட்டிவிட முடியவில்லை
வட்டுவாகலில் கடலுக்கு
கயல்கள் திரும்பிவரும் பாதை எதுவெனவும்
நிழல்களில் குந்தாமல்
நெடுந்தூரங்கள் கடந்தும்
ஆரூடங்கள் கேட்டாயிற்று
என்னை சூழந்திருக்கும்
பெண்களின் கண்ணீரை
கடலுக்கு வெட்டிவிடும் வழி
வட்டுவாகலில் எதில் உண்டு!
சேர்த்து வைத்திருக்கிறேன்
கோடி வரிகளை
ஓடி வருவாயா என் அழகிய
வெண்சங்குக்குமரி
பத்துவருடங்களில்
அடங்காப்பற்றின் பாடல்களுக்கு
என்ன ஆயிற்றென நினைக்கும்போது
தாரைதாரையாய்
வழிந்தோடும் கண்ணீரை
வெட்டிவிட முடியவில்லை
வட்டுவாகலில் கடலுக்கு
கயல்கள் திரும்பிவரும் பாதை எதுவெனவும்
நிழல்களில் குந்தாமல்
நெடுந்தூரங்கள் கடந்தும்
ஆரூடங்கள் கேட்டாயிற்று
என்னை சூழந்திருக்கும்
பெண்களின் கண்ணீரை
கடலுக்கு வெட்டிவிடும் வழி
வட்டுவாகலில் எதில் உண்டு!

No comments:
Post a Comment